தீர்ப்பு சொல்லும் செய்தி

சபரிமலை   மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பு , ரபேல் போர்விமான கொள்முதல் செய்ததில் ஊழல் இல்லை என்ற  தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு  நாட்டை ஆள்பவர்கள் திருடர் என்று காங்கிரஸின் ராகுல்  பேசியதை எதிர்த்து மீனாட்சி லேஹி  அவதூறு வழக்கு  போன்றவற்றின் மீதான  தீர்ப்பு  வெளிவந்து விட்டது .

சபரிமலை  கோயிலில்  அனைத்து வயதுடைய பெண்களையும்  தடையின்றி அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பிற்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாஸன அமர்வு விசாரித்தது .இதில் தலைமை நீதிபதி கோகாய்,இந்துமல்கோத்தர உள்ளிட்டோர் வழங்கிய   தீர்ப்பில்  மேலும் பல  கோணங்களில் விரிவாக விசாரிக்கப்பட வேண்டியுள்ளது எனவே 7நபர்கள் அல்லது 9நபர்கள் கொண்ட விரிவான அரசியல் சாசன பெஞ்சிக்கு மாற்றவேண்டும் என்று கோரியுள்ளது மேலும் இந்த தீர்ப்பு எல்லாத்தரப்பு மக்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளது முஸ்லீம் பெண்கள் மசூதியில் நமாஸ்  செய்ய உரிமைகோரி வழக்கு  நிலையில் இந்த வழக்கின் தன்மை குறித்து மேலும் விரிவாக  தீர்ப்பு கொடுக்கப்படவேண்டும் என்று நீதிமன்றம் கருதுவதாகவே   எண்ணத்தோன்றுகிறது.மற்ற  நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் முந்தைய தீர்ப்பு சரியானதே அது தொடர வேண்டும் என்று கோரியுள்ளது.

அடுத்ததாக பா  ஜ க அரசு பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரெபெல் போர் விமானங்களை வாங்குவதில் பெரிய முறைகேடு நடந்துள்ளது அதனை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் வெளியான தீர்ப்பு எந்த விதமான முறைகேடும் இல்லை என்று தீர்ப்பளித்தது . அதனை எதிர்த்து  முன்னாள் அமைச்சர் யஸ்வந்த் சின்கா   அருன் ஷோரி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடும் இல்லை என்ற முந்தய தீர்ப்பை உறுதி செய்ததுடன்  மறுசீராய்வு மனுவை   தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கில்  பிரச்சாரத்தின் போது  பேசிய ராகுல் நாட்டை ஆள்பவர் திருடராக இருக்கிறார் என்றும்  நாட்டில் முறைகேடுகளில் ஈடுபடும் அணைத்து நபர்களின் பெயரும் மோடி என்றே உள்ளது என்றும் பேசினார் இந்த வழக்கில் ராகுல் காந்தியை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் பொதுமேடைகளில் பேசுவோர் நிதானமாகவும் நேர்மையாகவும் இருக்கவேண்டும் இதுமாதிரி இனிமேல் பேசக்கூடாது என்று மனுவை தள்ளுபடி   செய்துள்ளது . நேரு குடும்பம் என்றாலே  பச்சாதாபத்துடன் நடந்துகொள்வது ஏன்  என்பதுதான் புரிய வில்லை அவதூறு வழக்கில் பேசிய தில்  அவதூறு இருக்கிறதா இல்லையா என்றுதான் பார்க்கவேண்டும்  பேசியது தவறு என்றாலும் எது தவிர்க்கப்படவேண்டும் என்று அறிவுரை கூறுவதால் என்ன நடக்கும் ராகுல் திருந்துவாரா அல்லது திருத்தப்படவேண்டியவரா என்பதை  காலம்தான் பதில் சொல்ல வேண்டும்