தீபாவளி வரப்போகிறது, வழக்கம் போல மிஷனரிகள், திராவிட இயக்கங்கள் என பலரும் பட்டாசை வெடிக்க வேண்டாம், மாசு அதிகரிப்பு, உடல் நலக்கேடு என சொல்லி முடக்க முயற்சிப்பார்கள்.
பள்ளி குழந்தைகளிடம் உறுதிமொழி வாங்குவார்கள். அதிமுக அரசும் இதற்கு ஆதரவளிக்கும் விதமாக செயல்படும். ஏற்கனவே பட்டாசு வெடிக்க ஒரு மணி நேரம் என நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளனர். போதாத குறைக்கு கொரோனா காலக்கட்டம், சமூக இடைவெளியை காரணம் காட்டி அப்பாவி ஹிந்துக்களை மிரட்டி முடக்க முயற்சிகள் நடக்கும்.
மேலும் சீன பட்டாசுகளின் ஊடுருவல் வேறு. இவர்களுக்கு தீபாவளி, போகி, ஹோலி போன்ற ஹிந்து பண்டிகைகள் என்றாலே அலர்ஜி.
மாசு அதிகரிப்பை காரணம் காட்டும் இவர்களுக்கு, கோடிக்கணக்காண மரங்கள் ஒவ்வொரு கிருஸ்துமஸுக்கும் வெட்டப்படும் போதும் முகரத்திற்கு ஏராளமான விலங்குகள் கொல்லப்படும் போதும் அதனால் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்புகளும் கண்களுக்கு தெரியாது.
கிருஸ்துமஸ் நள்ளிரவு பட்டாசுகளின் வெடி சத்தம் காதுகளில் கேட்காது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 15,094,678 மரங்கள் வெட்டப்படுகின்றன என்றால் உலகம் முழுவதும் எவ்வளவு என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
அரசு மேலும் இதை முடக்க சென்னையில் தீவுத்திடலில் மட்டுமே பட்டாசு விற்க வேண்டும். மற்ற மாவட்டங்களிலும் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் என சொல்வது, சில நாட்களுக்கு மட்டுமே வியாபாரம் செய்யும் பட்டாசு கடைகளுக்கு அதிக தொகையை வாடகையாக வசூலிப்பது போன்றவை அனைத்தும் தீபாவளியை முடக்க சிறுபான்மையினர் அழுத்தத்தால் இவர்கள் செய்யும் திட்டமிட்ட முயற்சி என்றே எண்ணத் தோன்றுகிறது.