தி ஹிந்துவின் தர்மம்

கடந்த அக்டோபர் 1-ல் ‘தி ஹிந்து’ பத்திரிகையில், நம் தேசத்தின் எல்லையில் பிரச்சனை அளிக்கும் நாடும், உலகிற்கு கொரோனாவை பரப்பிய நாடுமான சீனாவின் முழுபக்க விளம்பரம் வந்திருந்தது.

இடதுசாரி பத்திரிக்கையான தி ஹிந்துவில், இடதுசாரி நாடான சீனா விளம்பரம் செய்தது கவனிக்கத்தக்கது.

தி ஹிந்துவில் சீனா இப்படி ஒரு முழுபக்க விளம்பரம் வெளியிடுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே 2018, ஏப்ரல் 2020-களில் இதே போன்று வெளியிட்டிருந்தது. பணம் பெற்றோம், விளம்பரம் வெளியிட்டோம் என அவர்கள் சொல்லலாம்.

எனினும், தேசப்பற்று சிறிதேனும் இருந்திருந்தால், இதை வெளியிடுவதை குறித்து அந்த பத்திரிக்கை சிந்தித்திருக்கும். இதுதான் அவர்களின் தேசப்பற்றின் அளவு.

இதில் நாம் சிந்திக்க வேண்டிய மற்றொரு கோணமும் உள்ளது. முன்னதாக 2-ஜி வழக்கில் கலைஞர் தொலைகாட்சிக்கு முன் பணமாக 200 கோடியை கொடுத்ததாக டி.பி குழுமத்தின் ‘குசீகான்’ எனும் ஒரு பழக்கடை கைகாட்டப்பட்டது. அதன் இயக்குனர் ஷாகீத் பல்வா சி.பி.ஐயால் விசாரிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

அதே போல சீனாவை நல்லவர்களாக காட்ட, மத்திய அரசை குறைகூற அல்லது வேறு சில மறைமுக நோக்கங்களுக்காக சீனா ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கு வெள்ளையில் கொடுத்த கையூட்டா இந்த பணம் என்பதும் ஆராயப்பட வேண்டும்.

அரசு இதை ஆராய்ந்து, முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களும் இதைபோன்ற தேசவிரோத பத்திரிக்கைகளை புறக்கணிப்பது நல்லது.

அது அந்த பத்திரிக்கைக்கு மட்டுமல்ல, அதன் பின்புலமாக இருக்கும் கட்சிகள், பிரிவினையாளர்கள் உள்ளிட்டோருக்கும் ஒரு பாடமாக இருக்கும். சிந்திப்போம்.