தி.மு.கவின் ஹிந்து விரோத செயல்பாடுகள்

உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. உச்சவ ஆச்சாரியார் சக்கரவர்த்தி தீட்சிதர் வேதமந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்கிட கோயில் கொடிமரத்தில் காலை 7:30 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் ஆருத்ரா விழாவில்,  கொடியேற்றம், தேர்த் திருவிழா, தரிசன விழா ஆகியவை விமரிசையாக நடைபெறும். ஆனால் இவற்றை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழகத்தை ஆளும் ஹிந்து விரோத தி.மு.க அரசு, மாவட்ட நிர்வாகம் வாயிலாக உத்தரவிட்டுள்ளது. இதனால், காலை பக்தர்களைக் கோயிலுக்குள் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. பின்னர் தீட்சிதர்கள் 4 வீதிகளின் கதவுகளைத் திறந்து வைத்திருந்ததால் பொதுமக்கள் கோயிலுக்குள் சென்றனர். இதனிடையே, அரசு உத்தரவை மீறியதாகக்கூறியுள்ள காவல்துறை, தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.