டெல்லியில் குடியேறிய ரோஹிங்கியாக்கள், ஜகாத் அறக்கட்டளையின் நிலத்தில் வசித்தனர். கடந்த ஏப்ரல் 2018ல் இந்த இட்த்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், உத்தரப்பிரதேச அரசு, டெல்லியின் கலிண்டி குஞ்ச் பகுதியில் உள்ள தனது நிலத்தில் அவர்களைத் தற்காலிகமாக தங்க அனுமதித்திருந்தது. ஆனால், கடந்த மூன்று வருடங்களாக ரோஹிங்கியாக்கள், உள்ளூர் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அமனத்துல்லா கானின் ஆதரவோடு, அங்கு நிரந்தரமாக வசிக்கத் துவங்கிவிட்டனர். அங்கு கட்டப்பட்ட மண் வீடுகளின் எண்ணிக்கையும் 36ல் இருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், அந்த நிலத்தை ரோஹிங்கியாக்களிடமிருந்து திரும்பப்பெற உத்தரபிரதேச அரசு முடிவெடுத்துள்ளது. நிர்வாக ஒப்புதல் பெற்ற பிறகு, தில்லி காவல்துறையின் உதவியோடு அந்த நிலத்தை திரும்பப்பெற உ.பி, நீர்ப்பாசனத் துறை காத்திருக்கிறது. இதற்கான ஒப்புதல் ஒரு வாரத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.