திருமாவின் திமிர்

தமிழ் கடவுளாக போற்றி வணங்கப் படும் முருகனுக்கு உகந்த தைப்பூசத் திருவிழாவிற்கு, தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. இதுகுறித்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது பொறுக்காமல் ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியுள்ளார். திராவிடர் கழகம் நடத்திய ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய திருமாவளவன், ‘முருகன் தமிழ்க் கடவுள் என்றால் அவருடைய அண்ணனாகிய விநாயகர் மட்டும் எப்படி ஹிந்தி கடவுள் ஆவார்? இருவரும் ஒரு அப்பா, அம்மாவிற்கு பிறந்தவர்கள் தானே’ என கொச்சையாக கேள்வி எழுப்பினார். மேலும் ‘தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளித்தால் மட்டும் நாம் தமிழர்களாக தலைநிமிர்ந்து விடுவோமா?’ என்றும் கேட்டுள்ளார். இது தமிழகத்தில் உள்ள ஹிந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது.