திருப்பரங்குன்றமா? சிக்கந்தர் மலையா?

திருப்பரங்குன்றம்அறுபடை வீடுகளின் முதல் படைவீடு. முருகப்பெருமான் தெய்வயானையைத் திருமணம் செய்துகொண்ட புனிதத் தலம். இங்குள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றவேண்டும் என்ற ஹிந்து சமுதாயத்தின் அபிலாஷையை பிரதிபலிக்கும் வகையில் ஹிந்து முன்னணி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இதுபற்றிய விபரங்களை ஹிந்து முன்னணி மாநிலச் செயலாளர் மதுரை முத்துக்குமாரிடம் கேட்டபோது அவர் தெரிவித்த கருத்துக்கள்….    – ஆசிரியர்

நின்றுபோன கார்த்திகை தீபம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ‘குதிரை சுனை திட்டு’ எனும் பகுதியில் ஒரு பெரிய விளக்குத் தூண் இன்றும் உள்ளது. பல்லாண்டுகளாக அந்த விளக்குத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. இரண்டாம் உலTHIRUPPARAMகப்போர் நடைபெற்றபோது, அன்றைய ஆங்கிலேய அரசு, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்தது. அதனால், அந்த வருடம் அந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. மலை ஏறுவதில் சிரமம் இருந்ததால், அடுத்து வந்த ஆண்டுகளில் நமது கோயில் சிவாச்சாரியார்கள் கார்த்திகை தீபம் ஏற்றுவதையே நிறுத்திவிட்டார்கள்.

மலையில் பச்சை பிறைக் கொடி

முஸ்லிம்கள் சிலர் மலை மீதேறி சில பகுதிகளை ஆக்கிரமிக்கத் துவங்கினர். ‘சிக்கந்தர்’ என்பவருடைய பிணத்தைப் புதைத்து, அங்கு ஒரு தர்காவைக் கட்டி சிக்கந்தர் தர்கா என்று பெயர் சூட்டினர். அதுமட்டுமல்லாமல், மலைப் பகுதிகளையே சிக்கந்தர் மலை என்று அழைக்கத் துவங்கினர். மலை உச்சியில் உள்ள மரங்களில் முஸ்லிம்களின் பச்சை நிற பிறைக் கொடியைப் பறக்கவிட்டனர். அன்றைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சின்ன கருப்பத் தேவர் மக்களைத் திரட்டி மலை மீது சென்று, பச்சைக் கொடிகளை அகற்றிவிட்டு தேசியக் கொடியை ஏற்றிவிட்டு வந்தார். திருப்பரங்குன்ற மலை மீதுள்ள முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, தொடர்ந்து அவரது தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. 700 பேர் கைதானார்கள். சட்டம், ஒழுங்கு பிரச்சினை உருவாகிறது என்றவுடன் முதல்வர் ஆந்திர கேசரி பிரகாசம் நேரில் வந்து சின்ன கருப்பத் தேவரை சந்தித்து மிரட்டி போராட்டத்தை வாபஸ் வாங்க வைத்தார்.

லண்டனில் வழக்கு

தர்கா அமைந்துள்ள மலைப்பகுதிகள் முழுவதுமே தங்களுக்கு சொந்தம் என்று முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு லண்டன் ப்ரீவி (உயர்மட்ட) கவுன்சிலில் நடைபெற்றது. மலை முழுவதுமே, அங்கு கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானுக்கே சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமல்லாமல் அங்குள்ள தர்காவை எந்தக் காரணம் கொண்டும் விஸ்தரிக்கக் கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜகோபால் உயிர்த் தியாகம்

ஹிந்து முன்னணி தலைவராக இருந்த மதுரை ராஜகோபால், THOONதிருப்பரங்குன்ற மலையில் மீண்டும் கார்த்திகை தீபத்தை ஏற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்து அந்தப் பகுதியில் பாத யாத்திரை நடத்தினார். அதே போன்று ராமநாதபுரம் மாவட்ட கீழ்க்கரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த முஸ்லிம்கள் எதிர்த்தபோது தானே தலைமை தாங்கி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தினார். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றச் சொல்லி போராட்டம் நடத்தியதாலும் கீழ்க்கரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தியதாலும் மதுரையில் ராஜகோபால் அவரது வீட்டு வாசலிலேயே முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்டார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பில் தர்காவின் காம்பவுண்டு சுவரிலிருந்து 15 மீட்டர் தூரம் தள்ளி மலை உச்சியில் எங்கு வேண்டுமானாலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றிக் கொள்ளலாம்” என்று தீர்ப்பு வந்தது. வழக்கமாக ஏற்றும் தீபத் தூண் தர்காவிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. தமிழக அரசும் அறநிலையத் துறையும் நினைத்திருந்தால், பாரம்பரியமாக உள்ள விளக்குத் தூணிலேயே தீபத்தை ஏற்றியிருக்கலாம்; முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக கோயில் நிர்வாகம் மலையில் 150 அடி உயரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபத்தை ஏற்றினார்கள். இப்போது தீபம் ஏற்றும் இடம் இறந்தவர்களுக்காக ஏற்றப்படும் மோட்ச தீபம் இடமாகும். இன்றைக்கும் கூட அந்தப் பகுதியில் யாராவது இறந்து போனால் அவர்களுக்காக அங்கு மோட்ச தீபம் ஏற்றி வருகிறார்கள். மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது.

ஹிந்து முன்னணி தொடர் போராட்டம்

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஹிந்து முன்னணி போராடி வருகிறது. இந்த ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று, மலை உச்சியில் தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி களம் இறங்கியுள்ளது. முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த நினைக்கும் அரசு பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. எங்களது போராட்டம் தொடரும்” என்று முத்துக்குமார் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.