சகிப்புத்தன்மை பேசுது காங்கிரஸ் குடும்பம் பூமாலை எதன் கையில்?

ம்மாதம் 7ந்தேதி உத்தராகண்ட் மாநிலம், ஜகேஸ்வரில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி பேசும்போது மத்தியில் ஆளும் நரேந்திர மோடியின் அரசு, ஜவஹர்லால் நேருவின் காலத்தில் உருவாக்கப்பட்ட சகிப்புத்தன்மை இந்த நாட்டில் இருந்து மறைய வேண்டும் என்பதற்காகவே செயல்படுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார். உண்மையில் ஜவஹர்லால் நேரு சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டாரா என்பதும் உண்மையில் அவர் காட்டிய சகிப்புத்தன்மை எப்படிப்பட்டது என்பதும் இந்திய வரலாறு தெரியாத சோனியவுக்கு இவ்வாறு பேசுவதற்கு தகுதியுள்ளதா என்பதும் முதன்மையான கேள்விகள்.

NEHRUசகிப்புத் தன்மையை நேரு தனது எதிரிகளை ஒழிக்கவே பயன்படுத்தினார். இரண்டாவது ஹிந்துக்கள் பாதிக்கப்படும்போது, சகிப்புத்தன்மை பேசினார். இவரது சகிப்புத் தன்மையின் காரணமாக நாடு சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். சிறுபான்மையினரின் மனதில் தனது செல்வாக்கு அதிகரிக்க வேண்டும் என்பதே இவரது சகிப்புத்தன்மை.

நாடு பிளவுபட்ட சமயம் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து, சிறுபான்மையின ஹிந்துக்கள் கொடுமைப்படுத்துவது தொடர்கதையாக நிகழ்ந்தது. லட்சக்கணக்கான ஹிந்துக்கள் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். 1947 டிசம்பர் 31 அன்று வடக்கு கல்கத்தாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் சியாமா பிரசாத் முகர்ஜி பேசும் போது, கிழக்கு வங்கத்தில் (கிழக்கு பாகிஸ்தான்) ஹிந்துக்கள் வாழ்க்கை கடினமாகிவிட்டது. இதற்கு மத்திய அரசு ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்றார். இந்த கோரிக்கை கேட்பாரற்றுப்போனது. இந்நிலையில் மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினரான லட்சுமிகாந்த் மைத்ரா நாடாளுமன்றத்தில் ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு முகர்ஜி உட்பட பல காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். 1950 பிப்ரவரி 23 அன்று தீர்மானத்தின் மீது பேசிய நேரு கூறிய வார்த்தை முக்கியமானது, ‘ஙிடஞுண ணீஞுச்ஞிஞுஞூதடூ ட்ஞுணாடணிஞீண் ஞூச்டிடூ – ணிணாடஞுணூ ட்ஞுணாடணிஞீண் தீடிடூடூ ஞஞு ச்ஞீணிணீணாஞுஞீ ஞதூ ணாடஞு ஞ்ணிதிஞுணூணட்ஞுணணா.’ என்றார். ஆனால் தனது சகிப்புதன்மையின் காரணமாக தான் கூறிய வார்த்தைக்கு ஏற்ப செயல்படவில்லை. இதற்கு காங்கிரஸ் கட்சி கூறிய விளக்கம் சகிப்புத்தன்மை.

இதை நினைவுபடுத்தும் விதமாக நாடாளுமன்றத்தில் முகர்ஜி அமைதியான நடவடிக்கை எடுக்கப்படும் இல்லையேல் வேறு நடவடிக்கை எடுக்கப்படும்; என்று கூறப்பட்டது எப்போது நடக்கும் என்று கேள்வி எழுப்பினார். தனது சகிப்புத்தன்மையைக காட்டுவதாகக் கூறிய நேரு வாய்திறக்கவில்லை.

நேருவிற்கு தனக்கு எதிராக, தனிநபராக இருந்தாலும் அல்லது ஒரு அமைப்பாக இருந்தாலும் அதை உடைக்காமல், அல்லது அந்த தனி நபரை வீழ்த்தாமல் அவரால் உறங்க முடியாது. ஜனசங்கம் உருவாகி 1952ல் பொதுத் தேர்தலை சநதித்த போது, நேரு கூறினார், ‘ஐ தீடிடூடூ ஞிணூதஞிடிஞூதூ ஒச்ண குச்ணஞ்ட’ இதற்கு பதில் கொடுக்கும் விதமாக முகர்ஜி, ‘கூடஞு ஒச்ண குச்ணஞ்ட தீடிடூடூ ஞிணூதஞிடிஞூதூ ணாடஞு ஞிணூதண்டடிணஞ் ட்ஞுணணாச்டூடிணாதூ’ இந்த வார்த்தைகளின் மூலம் நேருவின் சகிப்புத் தன்மை நன்கு வெளிப்படும். சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளை உடைத்தவர் நேரு.   இவரின் சகிப்புத் தன்மை தற்போது பாரத தேசத்திற்கு தேவைதானா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அலகாபாத்தில் நடந்த அகதிகள் பொதுக் கூட்டத்தில், பாகிஸ்தானைப் பழிவாங்குவது பற்றி புருஷோத்தம் தாஸ் டண்டன் பேசினார் என்பதற்காகவே, காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக வரக்கூடாது என்பதில் நேரு முழு மூச்சாக இருந்தார் அவர்.

ஒருவேளை டாண்டன் தேர்வு செய்யப்பட்டால், நான் எனது பிரதமர் பதவியை ராஜினமா செய்வேன் என மிரட்டும் தொனியில் ராஜாஜிக்கு கடிதம் எழுதினார்.

காங்கிரஸ் கட்சியில் தனக்கு எதிராக இருப்பவர்களை ஒழித்துக் கட்டுவதற்கு மதவாதமும் பழம் பெருமைவாதமும் காங்கிரஸூக்குள் ஊடுருவி சில சமயங்களில் அரசின் கொள்கையையும் பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். குறிப்பாக குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் மீது நேருவிற்கு பற்று அல்லது பாசம் கிடையாது. துவக்க காலத்திலேயே ராஜேந்திர பிரசாத்தை குடியரசு தலைவராகக் கொண்டு வருவதற்கு நேரு சம்மதிக்கவில்லை, பிரசாத்திற்கு பதிலாக ராஜாஜியைக் கொண்டு வர முயன்றார். இதற்கிடையில் நேரு சமயம் கிடைக்கும் போதெல்லாம் பிரசாத்தின் மீது தனது வன்மத்தை பொழியத் தவறவில்லை. 1951-ல் குஜராத்தில் சீரமைக்கப்பட்ட சோமநாதபுர ஆலயத்தை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி அழைக்கப்பட்ட போது, நேருவின் சகிப்புத்தன்மை எவ்வாறு இருந்தது என்பதை சோனியா காந்தி படித்துப் பார்க்க வேண்டும். 1947 செப்டம்பர் மாதம் சர்தார் படேலே நேரில் வந்து பார்த்து புனரமைப்புப் பணிக்கு உதவ உறுதி அளிக்கும் வரை ஆலயம் சிதைந்த நிலையிலேயே இருந்தது. நேருவின் அமைச்சரவையில் பணியாற்றிய கே.எம்.முன்ஷி, சீரமைப்புப் பணியின் பொறுப்பை ஏற்று, ராஜேந்திர பிரசாத் அவர்களை அழைத்த போது, நேருவின் எதிர்ப்புக்கு மாறாக அந்த விழாவில் கலந்து கொண்டார்.

சர்தார் வல்லபாய் பட்டேல் மரணமடைந்த போது, அவரின் சவ ஊர்வலத்தில் குடியரசு தலைவர் கலந்துகொள்ள கூடாது என நேரு தனது கருத்தை ராஜேந்திர பிரசாத்திடம் கூறினார். ஆனால் ராஜேந்திர பிரசாத் நேருவின் கோரிக்கைக்கு மாறாக கலந்து கொண்டு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். நேருவின் சகிப்புத்தன்மை பழிவாங்கும் சகிப்புத்தன்மை என்பதை மீன்டும் நிரூபித்தார். ராஜேந்திர பிரசாத் மரணமடைந்த போது, குடியரசுத் தவைலராக இருந்த ராதாகிருஷ்ணன் அவர்கள், இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள பாட்னா செல்ல முடிவு செய்தபோது, அதைத் தடுத்தவர் நேரு. ஆனாலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் நேருவின் முடிவுக்கு மாறாக சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

வாய் கூசாமல் பொய்யை அள்ளி வீசுவதில் கைதேர்ந்தவர் நேரு. இதற்கு காங்கிரஸ் கட்சி சூட்டும் பெயர் சகிப்புத் தன்மை. நாடாளுமன்றத்தில் ஏடிணஞீத இணிஞீஞு ஆடிடூடூ என்ற மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் பெருவாரியான காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனாலும் அரசு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக குடியரசு தலைவரான ராஜேந்திர பிரசாத் அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் நான் நாடாளுமன்றத்தில் உள்ள குடியரசு தலைவர் இருக்கையில் அமர்ந்து, எனது கருத்தை நாடாளுமன்றத்திற்குத் தெரிவிப்பேன், அரசுக்குக் கருத்தை எழுதி அனுப்ப மாட்டேன்” என்று கூறியிருந்தார். இந்த சமயத்தில் நேரு, குடியரசு தலைவர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜனசங்கத்துடன் கூட்டாக சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க முயலுகிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.

நேரு, லியாகத் அலி கான் உடன்பாட்டிற்கு காங்கிரஸ் கட்சியிலே பலர் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். கிழக்கு வங்கத்திலிருந்து வரும் அகதிகள் பிரச்சினையில் பாகிஸ்தான் அரசை எச்சரிக்கை செய்யாமல், உடன்பாடு காண்பது தவறானது என் வாதிட்டனர். இந்நிலையில் அமைச்சரவையிலிருந்து இந்த உடன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சியாமா பிரசாத் முகர்ஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் இவருடன் இணைந்து ஜான் மத்தாய் என்ற ரயில்வே அமைச்சரும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இவர்களின் ராஜினாமா செய்யப் போகிறார்கள் என்பது தெரிந்தும், நேரு இந்தோனேஷிய பயணத்தைத் துவக்கினார். நேருவின் மீது ஜான் மத்தாய் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு நேரு பதில் அளிப்பதற்கு பதிலாக, நேருவின் சகிப்புத்தன்மையின் காரணமாக பதில் அளிக்கவில்லை என விளக்கம் கொடுத்தார்கள்!

சுதந்திரா கட்சியை துவக்கிய பின்னர், ராஜாஜி நேருவின் சகிப்புத்தன்மையை பற்றி பல்வேறு காலங்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்த கட்டுரைகளை சோனியா காந்தி படித்து பார்க்க வேண்டும்.

நேரு இப்படி என்றால் அவர் மகள் இந்திரா நீதிமன்றத் தீர்ப்பால் தன் பிரதமர் பதவிக்கு ஆபத்து என்றதும் 1975ல் அத்வானி, வாஜ்பாயி உள்பட ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைக்கும் ‘ஜனநாயக’ புத்தி உள்ளவராக விளங்கினார்.

சீக்கியர்கள் காங்கிரஸ்காரர்களால் படுகொலை செய்யப்பட்ட போது அதை நியாயப்படுத்தினார் சோனியா கணவர் ராஜீவ் காந்தி. இவர்களின் அருமந்த புத்திரன் ராகுல் மட்டும் வேறு எப்படிப் பேசுவார்? தேசிய இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸை சின்னாபின்னமாக்குவாராம்!

பூமாலை எதன் கையில்?