நூபுர் ஷர்மாவுக்கு தொடர் கொலை மிரட்டல்களும், அவரது தலையை துண்டித்தால் பரிசு தரப்படும் என்ற முஸ்லிம் அடிப்படைவாதிகளின் அறிவிப்பும் இன்னும் நிற்கவில்லை. இதுபோன்ற மற்றொரு சம்பவமாக, திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரும் தன்னை ஒரு மனித உரிமை ஆர்வலர் என்று அழைத்துக் கொள்பவருமான வாசிம் ராசா என்பவர், கடந்த ஜூன் 2ம் தேதி வெளியிட்ட தனது சமூக ஊடகப் பதிவில், நுபுர் ஷர்மாவின் தலைக்கு 5 லட்சம் பரிசு அறிவித்தார். ஆனால் அதன் பிறகு 30 ஜூன் 2022 அன்று அதனை திருத்தியுள்ளார். அந்த திருத்தப்பட்ட முகநூல் பதிவில், நூபுர் ஷர்மாவை கைது செய்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அறிவிக்கிறேன் என மாற்றிவிட்டார். எனினும், அவரது முதல் செய்தியின் ஸ்கிரீன்ஷாட் தற்போது வெளியாகியுள்ளது. திருணமூல் காங்கிரஸ் தலைமையிலான மேற்குவங்க அரசும் அதன் முதல்வர் மாயாவதியும் சட்டப்படி வாசிம் ராசா மீது நடவடிக்கை எடுக்குமா என்பதே தற்போதைய கேள்வி.