திருக்கோயில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தனி தொலைகாட்சி துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதை அரசு நிதியில் செயல்படுத்தாமல் கோயில்களின் நிதியை எடுத்து செயல்படுத்த முனைந்திருப்பது தவறான முன்னுதாரணம். ஹிந்து அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் பல கோயில்கள் முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளன. அவற்றை சீர்படுத்தாமல், நிர்வாக முறைகேடுகளை களையாமல் தமிழக அரசு இது போன்ற கொள்கை முடிவு எடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது குறித்த வழக்கில், கோயில் பொதுநல நிதியை கோயில்களுக்கு மட்டுமே செலவழிக்க முடியும். இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என மனுதாரர் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.