திரிபுரா வழக்கறிஞர்களுக்கு சம்மன்

வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து திரிபுராவில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பேரணி ஒன்றை நடத்தினர். அப்போது மசூதி ஒன்று எரிக்கப்பட்டதாக பொய்யான செய்தியும் பொய்யான புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. உண்மையில், மசூதியில் இருந்த முஸ்லிம்கள்தான் பேரணியின் மீது கற்கள் எறிந்து தக்குதல் நடத்தினர். மேலும், இந்த பொய்யை சாக்கிட்டு தற்போது வரை அவர்கள் அங்கு பல கலவரங்களை நிகழ்த்தி வருகின்றனர். இவ்வழக்கை விசாரித்து வரும் திரிபுரா காவல்துறை பொய்யான தகவல் பரப்பியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் எஸ்தேஷாம் ஹஷ்மி, அமித் ஸ்ரீவஸ்தவ், அன்சார் இந்தோரி, முகேஷ் குமார் ஆகிய நால்வரையும் தங்கள் பொய்யான வலைத்தள பதிவுகளை அழிக்கவும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் ஜனநாயகத்திற்கான வழக்கறிஞர்கள், தேசிய மனித உரிமைகள் அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகளில் முக்கிய உறுப்பினர்களாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.