திகாரில் சிறைவாசத்தை தொடருகிறார் சிதம்பரம்

தீஸ்தா செதல்வாத் என்ரொ ரு முற்போக்கு சுமூக ஊடகவியலாளர் .அதாவது கம்யூனிஸ்ட்  பார்வையில்அறிவுஜீவி . அவர் கோத்ரா  கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்கிறேன்  என்ற போர்வையில் சாட்சியங்கள் இல்லாத திரட்டமுடியாத வழக்குகளில் பொய் சாட்சிகளை ஏற்பாடுசெய்து அவர்களை சம்பவத்தை நேரில் பார்த்தேன் இன்னார்தான் அந்த செயல்களில் ஈடுபட்டார்கள் என்று பொய்ச்சாட்சியம் சொல்ல லட்சக்கணக்கான  செலவு    செய்து செட்டப்  சாட்சி ஏற்பாடு செய்தவர் . இவரது ஏற்பாட்டின் பெயரில் ஒருவழக்கில் சாட்சியம் சொன்ன முஸ்லீம் பெண்மணி எதிர்தரப்பு  வழக்கறிஞரின்  குறுக்கு விசாரணையில்   தீஸ்தா   சொல்லித்தான் இப்படி பொய்ச்சாட்சி சொன்னேன் என்று கோர்ட்டில் மன்னிப்பு கேட்டு   ஓட்டம் பிடித்தது வேறுகதை .

      இப்படி தில்லாலங்கடி வேளைகளில் ஈடுபட்ட இந்த அம்மையார் வெளிநாடுகளில் இருந்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்கிறேன்  என்ற பெயரில் வசூல் செய்த பணம் சுமார் 18 லட்சரூபாயை  அலுவலக அலங்காரதிற்காகவும் அலுவலக வாடகையாகவும் செலவழித்தும்   கண்டுபிடிக்கப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது இந்த வழக்கில் அவரை அரெஸ்ட் செய்ய கோர்ட்  உத்தரவிட்டதும் அவர் தட்டியது கபில் சிபல் என்ற டெல்லி  வழக்கறிஞரைத்தான். இவரது போதாதகாலம் அன்று அவர் டெல்லியில் இல்லாமல் மும்பையில் இருந்தார் இருந்தாலும் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர் சீனியர் லாயர் சும்மா இருப்பாரா என்ன ஒரே ஒரு போன் கால் அவ்வளவுதான் அவர் கேட்ட பெயில் ஆர்டர் அவருக்கு டெலிபோனிலேயே  வழங்ககப்பட்டது.அந்த அளவுக்கு நீதி துறையையே ஆட்டிப்படைத்த பெரியியிய மனிதர் அவர்.
         இன்று டெல்லி சி பி ஐ கோர்ட்டில்  சிதம்பரம் என்ற தனது கட்சிக்காரருக்காக அல்லாடுகிறார் .. சிதம்பரம் திகார் செல்லாமல் விசாரணை என்ற பெயரில் அரசாங்க விருந்தினராக அமலாக்க துறையிடம் செல்லுவதற்கு கூட தயார் திகார் சிறையில் வேண்டாம் என்று கெஞ்சி கூத்தாடுகிறார் . இவ்வளவுக்கும் சி பி ஐ அவரை  இப்போதைக்கு  அவர் ஜெயிலில் இருப்பதால் சாட்சியங்களை கலைக்க வழி இல்லை அதனால் அவர் ஜெயிலில் இருக்கட்டும் எங்களுக்கு தேவைப்படும் பொது நாங்கள் விசாரிக்கிறோம் என்கிறது.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி என்னை இன்றே இப்போதே விசாரிக்க வேண்டும் என்று விசாரணை மன்றத்தை கோறமுடியாது இவருக்காக இப்படி விசாரித்தால் பின்னர் இதையே முன்னுதாரணமாக கொண்டு எல்லோரும் கோறுவார்கள். இது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று வாதாடிய அரசு வழக்கறிஞர் வாதத்தை ஏற்றுக்கொண்ட கோர்ட் சிதம்பரத்தின் ஜாமின் மனுவையும் அமலாக்கத்துறைக்கு போட்ட அப்பிலையும்   சி பி ஐ கோர்ட் நிராகரித்துவிட்டது. இந்த பெரிய மனிதர்தான் நீதிபதி சைனியிடம் 28 தடவை ஜாமீன் வாங்கிய அதிமேதாவி. கிரிமினல் புத்தியால் பலமுறை சட்டத்தை ஏமாற்றிய இந்த நபர்   நீதியின் முன்பு   என்றாவது ஒருநாள் தலைவணங்கியே தீரவேண்டும் என்பதைத்தான் இந்த வழக்கின் விசாரணை நிரூபிக்கிறது.
கேட்ட மாத்திரத்தில் ஜாமீன் கிடைக்க இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியும் இல்லை. தங்களுக்கு வேண்டப்பட்ட நபர் நீதியரசராகவும் இல்லை. அது புரிந்தால் ஊரை அடித்து உலையில் போடும் கிரிமினல் அரசியல் வியாதிகள் திருந்துவார்கள் என்பது திண்ணம்.