ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 15-க்கும் மேற்பட்டவற்றை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர் தலிபான்கள். இரண்டாவது முக்கிய நகரமான காந்தஹாரும் அவர்களின் கைக்கு சென்றுவிட்டது. ஆப்கானிஸ்தானில் தலிபான் படைகள் இதே வேகத்தில் முன்னேறினால் ஓரிரு மாதங்களில் அப்படைகள் அந்நாட்டை முழுமையும் வசப்படுத்தி விடும் என அமெரிக்க ராணுவத்தின் உளவுத் துறை கணித்துள்ளது. காபுலில் அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிவோரை பத்திரமாக அழைத்துவர ஆப்கானிஸ்தானுக்கு 3 ஆயிரம் படையினரை அமெரிக்க அனுப்புகிறது. இதேபோல பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாட்டு தூதரகப் பணியாளர்களை அழைத்துவர அந்நாடுகளும் சிறப்புப் படைகளை ஆப்கனுக்கு அனுப்புகின்றன. இந்நிலையில், அந்நாட்டில் துப்பாக்கி முனையில் அமைக்கப்படும் அரசை அங்கீகரிக்கப் போவதில்லை என நமது பாரதம், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.