தமிழ் ஹிந்து கேட்கிறான் இதெல்லாம் நியாயம்தானா சொல்லுங்கள்?

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததற்காக 500 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது கூட நியாயம் அற்றது. இது ரெண்டும் பாகிஸ்தானோ, பங்களா தேஷோ இல்லை. ஹிந்து பண்டிகைகள் கொண்டாட இதுபோன்ற கெடுபிடிகள் விதிப்பது தேவையற்றது.

தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட வழக்கில் கைதான வரை ஜாமீனில் விடுவிக்க       இவர் ஒரு முஸ்லிம் அறக்கட்டளைக்கு ரூ.25,000 நன்கொடையும் ஒரு கிறிஸ்தவ அறக்கட்டளைக்கு ரூ.25,000 நன்கொடையும் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அபராதத் தொகையை மதச்சார்பு நிறுவனங்களுக்கு வழங்குவது சரிதானா?

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாமேடையின் பின்புறம் சீரியல் விளக்கில் பிள்ளையார், ஓம் போன்ற சின்னங்கள் ஏற்படாகியிருந்தது. இதைக் கண்டித்து தி.க.தலைவர் வீரமணி அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

பல்கலைக்கழக துணை வேந்தர் அறையில் சரஸ்வதி படம் மாட்டப்பட்டுள்ளதையும் வீரமணி கண்டித்துள்ளார். பல்கலைக்கழகத்திற்கு பெரியார் பெயர் சூட்டப்பட்டுள்ளதால் அது திராவிடர் கழக கொள்கை அடிப்படையில் அமைய வேண்டும் என்று வீரமணி எதிர்பார்ப்பது நியாயமில்லை.

பள்ளி, கல்லூரிகளில் ஹிந்து மாணவர் அமைப்பு அமைக்க தடைசெய்யப்பட்டுள்ளதாக ஒரு கல்வி அதிகாரி சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதென்ன ஹிந்து மாணவர் அமைப்பு? எந்த மதச்சார்பு  பெயரில் அமைப்புகள் கூடாது என்று தானே சொல்ல வேண்டும்? தேச விரோத நக்ஸல், கம்யூனிஸ்ட், ஜிகாதி அமைப்புகள் இருக்கலாமா? நல்லவேளை, கல்வி அமைச்சர் அந்த சுற்றறிக்கையை மறுத்து அறிக்கை வெளியிட்டார். சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள சரவணா ஸ்டோர் கடை முகப்பில் உள்ள விநாயகர் கோயிலை அகற்ற வேண்டும் என்பதாகச்  சிலர் சொன்னதாகவும், சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் அதை மறுத்து விட்டதாகவும் சமூக ஊடகங்களில் வலம் வருகிறது ஒரு செய்தி. இது எதைக் காட்டுகிறது?