சுஜித் வில்சனின் மரணமும் சுழன்றடித்த அதர்ம்ப் புயலும்

இரண்டு வயதுக் குழந்தை ஆழ்குழாய் கிணற்றில் சிக்கி 20 மணி நேரம் உயிருக்குப் போராடியது 80 மணி நேரம் கழித்து உயிரற்ற  உடலாக வெளிக்கொணர்ந்த நெஞ்சை உலுக்கியது.

முதலிலேயே தெளிவுப்படுத்தி விடுகிறேன். உயிர் முக்கியமானது. அது யாருடையதாக இருந்தாலும், காப்பாற்ற வேண்டியது அவசியமானது. ஆனால் மதம், ஓட்டு என்பதெல்லாம் குறுக்கிட்டதால் கட்டுரை எழுத வேண்டிய கட்டாயம் வந்தது.

குழந்தையை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்புதான். ஆனால் 4,5 மந்திரிகள், 6,7 எம்.எல்.ஏக்கள், 16,20 உயர்நிலை IAS, IPS அதிகாரிகள் 3 நாட்கள் அங்கேயே முகாமிட்டதற்கு காரணம் என்ன? குழந்தை குழிக்குள் விழுந்த 3,4 மணி நேரத்திற்குள் ஒவ்வொன்றாக அங்கு போய்ச்சேர்ந்தன Satilite Media TVக்கள். Live Coverage ஆரம்பித்தவுடன் தாங்கள் தான் ‘ஆபத் பாந்தவன்’, ‘அநாத ரட்சகன்’, ‘வானிலிருந்து குதித்த தேவதூதுவன்’ என்று தங்கள் முகத்தைக்காட்ட அங்கு கூடியது அரசியல் கட்சி பட்டாளம்.

நான் எதிர்கட்சிகள், குறிப்பாக ‘எந்த சரக்கும் சாரமும் இல்லாமல் சப்பைக் குற்றச்சாட்டு வைக்கும்” ஸ்டாலின் போன்றோர் பேச்சுக்கு எதிர்வாதம் வைக்கப் போவதில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் அரசுப் பணத்தை, அரசு இயந்திரத்தை, அரசு அதிகாரிகள், தீபாவளிக்கூட கொண்டாடவிடாமல் களத்திலேயே இருக்க வைத்தது எந்த உலக நியாயம்!

எல்லா ஊர் கோயில்களிலும் குழந்தையை உயிருடன் மீட்க பிரார்த்தனை செய்வதை காண்பித்ததைவிட, பல ஊர் சர்ச்சுக்கள், மசூதிகளில் நடந்த பிரார்த்தனைகள் பிரமிப்படைய வைத்தது. இதற்கு காரணம் தேடிய போதுதான் குழந்தை கிறிஸ்தவ மதத்தை சார்ந்தது என்பது தெரியவந்தது. அதனால் பல்வேறு கட்சித் தலைவர்கள் விஜயம் நூறை ஐ எட்டியது.இந்த சோகத்தை உலகுக்குத் தெரிவித்து மிகப்பெரும் TRPஐ ஏற்றிக்கொண்டது நம் கண்ணியத்துக்குரிய ஊடகங்கள் தான். என்ன சமூகப்பொறுப்பு! என்ன உயிர்மீது மரியாதை!

இந்த சோக சம்பவம் நடந்தது ஒரு பக்கம் சுயலாபம் மறுபக்கம் சோகத்தை மீறிய தமாஷ் நிகழ்வுகள்.

ஆனால் நோகாமல் வேகாமல் வெறும் ரூ.10 லட்சத்தை ‘இழப்பீடாக’ கொடுத்து ரூ.10 கோடிக்கு விளம்பரம் பெற்றுக்கொண்ட ஸ்டாலின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட இருந்தார். வாயை மூடிக்கொண்டு பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு பல்லை மட்டும் காண்பித்திருந்தால் அந்த விருது கிடைத்திருக்கும்.

ஆனால் நாங்கள் ஆட்சியில் இருந்தால் காப்பாற்றி இருப்போம் எனவும், ராணுவம் ஏன் வரவழைக்கப்படவில்லை எனவும் உளறி, தன் ‘அதிமுட்டாள் தனத்தை’ காண்பித்ததால், ஆட்ட நாயகன் விருது போச்சு.

‘சிறுபான்மை சிறுவன் என்பதற்காக கலந்து கொள்ளவில்லை’  என கம்யூனிஸ்ட் அருணன் தமாசு செய்தார். (பொன். ராதாகிருஷ்ணன், விஜயம் அவர் கண்களில் படவில்லைபோலும்) ரூ.1 கோடி இழப்பீடு தரவேண்டுமென ‘சர்ச்சுகளின் சம ஆள்’ திருமாவளவன் தமாசு செய்தார்.

இடை இடையே அமைச்சர்களும், அவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதால் அதிகாரிகளும், சிலசமயம் நிபுணர்களும் தங்கள் நேர்மையை பேட்டியில் எடுத்துச் சொல்லிய வண்ணம் இருந்தார்கள்.

ஆழ்குழியில் சிக்கிய குழந்தை கடைசியில் அழுகிய நிலையில் சடலமாக வெளியே எடுக்கப்பட்டு, அவசர அவசரமாக போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. இதுவரை ஓகே தான். கொஞ்சம் மிகையான ஓவர் ‘ஆக்ட்’ இருந்தாலும் கூட.

இதற்குப்பிறகு குழந்தை தங்களது கவனக்குறைவால் இறக்க காரணமாக இருந்த அந்த பெற்றோருக்கு ஏன் இழப்பீடு கொடுத்தார்கள்? எப்போதும் அதிர்ஷ்டம் ஒரு ஓட்டை போட்டு கூரைவழியாக கொட்டாது? கொட்டினால் கூரையை பிய்த்துக் கொண்டுதான் கொட்டுமாம். பிரிட்டோ ஆரோக்யராஜ்  தம்பதியை முதலில் ஸ்டாலின் பார்த்து  ரூ.10 லட்சம் ‘இழப்பீடு’ கொடுத்தார். அவர் கைராசி அதைவிட நான் முந்தி எனக்காட்ட முதலமைச்சரே நேரில் வந்து ரூ.20 லட்சம் இழப்பீடு. எதிர்கட்சி, ஆளும்கட்சி எல்லா கட்சியும் வரிசையில் நின்று அந்த அப்பாவி குழந்தைக்கு மலர்வளையம்! 27 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை ஏன் செய்யவில்லை என்று மட்டும் தெரியவில்லை.