தமிழில் மருத்துவ சொற்கள்

சென்னை, தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், ‘தமிழும், தமிழ் மருத்துவமும்’ என்ற விழிப்புணர்வு விழா, சித்தர் திருநாள் விழா நடைபெற்றது. அதில், தனித்தமிழ் சொற்களுடன், தமிழ் மருத்துவ சொற்கள் இணைப்பிற்காக சித்த மருத்துவ நிறுவனத்திற்கும் அகரமுதலி திட்ட இயக்கத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், கொரோனா தொற்றுக்கு கபசுர குடிநீர் சிறந்த தீர்வு என சர்வதேச அளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கபசுர குடிநீரின் மருத்துவ குணம் குறித்து ‘லேன்செட்’ மருத்துவ இதழில் கட்டுரை வெளியாகி உள்ளது. இது நமது பாரத பாரம்பரிய மருத்துவத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என கூறினார்.