தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசுக்கு மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் உள்ளது? அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் மும்மொழி கொள்கை பின்பற்றுவதால், கூடுதலாக ஒரு மொழி சேர்ப்பதில் என்ன சிக்கல் உள்ளது என கேள்வி எழுப்பினர். ஹிந்தி படிக்கும் வாய்ப்பு இல்லாமல் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். வேறு மாநிலங்களில் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மக்கள் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும் என கூறினர். இதற்கு தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகத்தில் இரு மொழி கொள்கையை பின்பற்றுவது என்பதே கொள்கை முடிவு. ஹிந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை என தெரிவித்துள்ளது. இதையடுத்து, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.