ஆசிரியர் தினத்தையொட்டி தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 46 ஆசிரியர்களை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தேர்வு செய்தது. இவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி விக்யான் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், விருதுகளை வழங்கி ஆசிரியர்களை கவுரவித்தார்.
விழாவில் தமிழகத் தில் இருந்து எம்.மன்சூர் அலி, ரா.செல்வக்கண்ணன் என்ற 2 ஆசிரி யர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றனர்.
எம்.மன்சூர் அலி
இவர்களில் எம்.மன்சூர் அலி, ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள வைரவிழா மேல்நிலைப் பள்ளி யில் கடந்த 1991 முதல், சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பட்டதாரி ஆசிரியரான இவர், முனைவர் பட்டம் பெற் றுள்ளார்.
கடந்த 27 ஆண்டுகளாக கற்பித் தலில் புதிய யுக்தி, சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந் துள்ளார்.
தமிழக அரசின் சுற்றுச் சூழல் விருது, ஓவியத்தில் கலை பண்பாட்டுத் துறையின் கலை சுடர் மணி விருது, அறிவியல் கண்காட்சி யில் தென்னிந்திய விருது, மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான ஜனாதிபதி பதக்கம் உள்ளிட்ட வற்றை ஆசிரியர் மன்சூர் அலி ஏற்கெனவே பெற்றுள்ளார்.
ரா.செல்வக்கண்ணன்
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மற்றொரு தமிழக ஆசிரிய ரான ரா.செல்வக்கண்ணன் (54), கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். இவர், கடந்த 2016-ல் மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதைப் பெற்றுள்ளார்.
கடந்த 1995-ல் ஆசிரியர் பணி யில் சேர்ந்த இவர், 2002-ல் தலைமை ஆசிரியரானார்.
2005-ல் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப் பேற்றார். இவரது முயற்சியால், 2006-ல் தமிழகத்தில் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் முதன் முத லாக கணினி ஆய்வகம் அமைக்கப் பட்ட பள்ளி என்ற சிறப்பை இப் பள்ளி பெற்றது. பசுமை வளாக மாகப் பள்ளியை மாற்றினார். இப் பள்ளி, 2015-ம் ஆண்டுக்கான ஐஎஸ்ஓ 9001 சர்வதேச தரச்சான்றி தழைப் பெற்றது. இவரது சொந்த ஊர் க.பரமத்தி அருகே உள்ள மோளப்பாளையம் ஆகும்.