ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்த உற்பத்தியா ளர்களில் ஒன்று, தைவான் நிறுவனமான பெகாட்ரான் கார்ப்பரேஷன். இது பாரதத்தில், தனது முதல் உற்பத்தி பிரிவை அமைப்பதற்காக தமிழகத்தை தேர்வு செய்ய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாக்ஸ்கான், விஸ்ட்ரானுக்குப் பிறகு ஆப்பிள் ஐபோன்களுக்கான மூன்றாவது பெரிய ஒப்பந்த உற்பத்தியாளரான பெகாட்ரான் தமிழகத்துக்கு வர உள்ளது. இதன் முதலீடு 7,000 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்ஸ்கான் நிறுவனமும் ஸ்ரீபெரும்புதூரில் அதன் ஆலையை விரிவுபடுத்துவதற்காக ஆறு வருடங்களில் 18,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் தொழில் வாய்ப்புகள் அதிக ரிக்கும். மத்திய அரசின் இது போன்ற முயற்சி களால், உலகிலேயே அதிக அலைபேசிகளை உற்பத்தி செய்யும் தேசமாக பாரதம் வளர்ந்து வருகிறது.