லக்ஷர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் கோவையில் முகாமிட்டு இருப்பதாகவும் தமிழக போலீசாருக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள். கடல் வழியாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளனர். அதனால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படி உளவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது இதன் காரணமாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தாக்க கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் சில இடங்களில் காவல் துறையினர் முழு கண்கானிப்பில் உள்ளனர். ஆனால் பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் கொடுத்த அமைப்பினர் மற்றும் தனி நபரின் இருப்பிடங்களில் முழு சோதனை நடத்தினால் ஊடுருவிய பயங்கரவாதிகள் பிடிபடுவார்கள். இந்த அரசு இதை செய்ய முன் வருமா என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க கூடிய மசூதிகள், மதரஸாக்கள் உள்ளன. ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் அமைப்புகள் உள்ளன. பிரிவினையை தூண்டும் ஜாகீர் நாயக்கிற்கு ஆதரவாக போராட்டங்களை நடத்திய தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாத் அமைப்புதான், இலங்கை குண்டு வெடிப்பின் சூத்திரதாரியுடன் தொடர்பில் இருந்தவர்கள். கோவை குண்டு வெடிப்பை வீடியோவாக காட்டி கோடிக் கணக்கில் பணம் வசூலித்த மனித நோய மக்கள் கட்சியும் விசாரனைக்கு உட்படுத்த வேண்டிய அமைப்பாகும். கேரளத்தில் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வரும் பாப்புலர் பிரண்ட் ஆ.ப் இந்தியாவின், கிளைகள் தமிழகத்திலும் உள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற பெயரில் இயங்கும் அரசியல் கட்சி, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், மனித நீதி பாசறை, என்ற பெயரில் இயங்கும் அமைப்புகளின் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும்.
தமிழகத்தில் அல்-உம்மா என்ற அமைப்பு தற்போது பல்வேறு பெயர் மாற்றத்துடன் மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் உலா வருகிறது. ஆம்பூர் கலவத்திற்கு காரணமான சட்ட மன்ற உறுப்பினர் மனித நேய மக்கள் கட்சியைச் சார்ந்தவர். இன்றும் கூட ராமாநாதபுரம் மாவட்டத்தில் தனி ஆட்சியே நடக்கிறது. இஸ்லாம் அல்லாதவர்கள் நுழைய தடை என பல கிராமங்களில் தட்டி எழுதி வைத்துள்ளார்கள். காவல் துறை அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்து நடத்துபவர்கள் இஸ்லாமியர்கள். இவர்களின் தயவுடன் தான் கடல்கடந்து வரும் பயங்கரவாதிகள் அடைகலம் அடைகிறார்கள்.
கோவை, திருப்பூர் பகுதியில் பெருமளவு தொழிற்சாலைகள் இருப்பதால், தொழிலாளர்களின் பற்றாக்குறை போக்குவதற்கு முழுமையான விசாரனையின்றி தொழிற்சாலைகளில் ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதன் காரணமாக குறைவான சம்பளத்திற்கு ஆட்கள் கிடைக்கிறார்கள் என்ற காரணத்தினால், ஊடுருவிய பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் பல தொழிற்சாலைகளின் பணியில் அமர்த்துப்பட்டுள்ளார்கள். 2018-ல் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் 22 சட்ட விரோத பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் ஆதார் அடையாள அட்டையும், இவர்களில் சிலரிடம் ரேஷன் அட்டையும், பலரிடம் வாக்காளர் அடையாள அட்டையும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பங்களா தேஷ் நாட்டில் உள்ள Khula ச் சார்ந்த முகமது பாபுல் ஹூசைன் திருப்பூர் செவ்வந்திபாளையத்தில் 13 வருடங்களாக மளிகை கடை நடத்தி வருகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், பங்களா தேஷ் நாட்டைச் சார்ந்த இவர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருப்பது ஆச்சிரியமானதாக இருக்கிறது.
திருப்பூர் ஊடுருவும் பங்களா தேஷ் இஸ்லாமியர்களின் சொர்க்கமாக திகழ்கிறது. சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருப்பதாக உளவு துறையினர் தெரிவிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்ட முகமது மோசூருதீன், பல வருடங்களாக திருப்பூரில் வசித்து வந்ததும், தனது குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பெற வேண்டி மேற்கு வங்கம் வந்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்தான். ஆனால் உண்மையில் இவன் பங்களா தேஷ் நாட்டைச் சார்ந்தவன், பர்துவான் மாவட்டத்தில் சட்ட விரோதமாக ஊடுருவி, பின்னர் திருப்பூரில் தஞ்சம் புகுந்தவன். இவனுக்கு ஐ.எஸ். வுடனும், பங்களா தேஷ் நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களா தேஷ் அமைப்புடன் தொடர்பில் இருந்தவன், பர்துவான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவன் என்றார்கள்.
பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் தமிழகத்தில் ஊடுருவ, உள்ளுர் இஸ்லாமியர்களின் உதவியில்லாமல் தங்க முடியாது. ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களா தேஷ் பயங்கரவாத அமைப்பிற்கு இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள அல்-உம்மா அமைப்பும், சிமி, இந்தியன் முாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதால், ஊடுருவியவர்கள் இலகுவாக தங்குவதற்கும், அவர்கள் மூலமாக பயங்கரவாத செயல்களை செய்தவர்கள் தப்பித்து பாதுகாப்பாக இருப்பதற்கும் இந்த உதவி தேவைப்படுகிறது
தமிழகத்தில் ஆளும் அ.இ.அ.தி.மு.க.வும் சரி அல்லது இதற்கு முன் ஆண்ட தி.மு.க.வும் சரி இந்து இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க காட்டும் ஆர்வத்தில் ஒரு பங்கு இம் மாதிரியாக ஊடுருவிய அந்நிய நாட்டு சக்திகளை தடுக்க நடவடிக்கை எடுத்திருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. காங்கிரஸ் கட்சி கூட விடுதலை புலிகளின் ஊடுருவலை தடுக்க கொடுத்த குரல் போல், பங்களா தேஷ் ஊடுருவிய இஸ்லாமியர்களை தடுக்க வேண்டும் என குரல் கொடுக்கவில்லை. தமிழகத்தில் தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் அதிக எண்ணிககையில் தொழிலாளர்கள் தேவைப்படுவதாலும், கம்யூனிஸ்ட்களின் பிடியில் உள்ள தொழிற்சங்கங்களுக்கு மாற்றாக இவர்கள் இருப்பதாலும், தேச நலனைவிட தங்களின் நலனில் அக்கரை செலுத்துவதால், ஊடுருவியவர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாதின் மறுப்பு மேலும் பல சந்கேங்களை எழுப்புகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளை? ஐக்கிய அரசு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஓமான், பக்ரைன், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கையில் உள்ளது. இலங்கையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளையின் பெயர் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத். குண்டு வெடிப்பிற்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்திலிருந்து 2014-ல் பிரிந்தது. எனவே பிரிந்த அமைப்பினரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பில் உள்ளார்கள். எவ்வாறு தீவிரவாத அமைப்புகளுடன் அல்காயிதா, தாலிபான் உறவை ஏற்படுத்திக் கொள்வார்களோ, அதே போல் இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத்துடனும் உறவு வைத்துக் கொண்டார்கள். 2018-ம் வருடம் டிசம்பர் மாதம் 19ந் தேதி தேசிய புலனாய்வு ஏஜன்சி திண்டிவனம், கோவை குனியமுத்துர், உக்கடம், சென்னை ஒட்டேரி மற்றும் மண்ணடியில் நடத்திய சோதனையில் சிக்கிய பென் டிரைவ் சிடி. மெமரி கார்டுகளில் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ஜஹ்ரான் பின் ஹாசிம் பேசிய பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள் இருந்தன. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு தீவிரவாத குழு உருவாகியுள்ளது. அதில் தமிழகத்தைச் சார்ந்த ஒன்பது பேர்கள் இருப்பதாகவும், அவர்களில் நான்கு பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரனையில் கூட, தமிழகத்திலும் அல்லது அண்டை நாட்டிலும் குறிப்பாக இலங்கையில் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்படும் என்ற தகவல் கிடைத்தது கைது செய்யப்பட்ட சாகுல் அமீது, அன்சாரி மீரான், அப்துல்லா, முத்தலீப் ஆகிய நான்கு பேர்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பில் இருந்தவர்கள். இவர்களின் தலைவர் அன்சாரி மீரான், குமரி மாவட்டத்தைச் சார்நவர், ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆட்களை அனுப்பி வைப்பது இவரின் தலையாய கடமையாகும். இவர் மூலம் ஐ.எஸ். அமைப்பிற்கு சென்று பயிற்சி எடுத்தவர்கள், இலங்கை குண்டு வெடிப்பை நடத்தியவர்கள்.
தமிழகத்தின் தொடர்பு இருந்த காரணத்தால், மண்ணடியில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரனையில் , இலங்கை குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடிமருந்து பொருட்கள் கொச்சியில் உள்ள அபுபக்கர் உதவியுடன் கடல்வழியாக கொண்டு செல்லப்பட்டது. இந்த உண்மையை மறைத்து, தங்களது அமைப்பு ஒரு சமூக அமைப்பாகவும், புயல் , வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தின் போது உதவி புரிவதாகவும் கூறி வருகிறது. ஆனால் இவர்களின் உண்மையான நோக்கம் பயங்கரவாதம் என்பதை தவிர வேறு எதுவும் கிடையாது.
இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் ஆதரவாக குரல் கொடுக்கும் தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், இலங்கையில் குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பு ஏற்றவுடன், அதை கண்டித்து அறிக்கை விடவில்லை, கண்டன குரல்களை கூட எழுப்பவில்லை. இலங்கையில் தமிழ் பேசும் கிறிஸ்துவர்கள் வழிபடும் நேரத்தில் குண்டு வெடிக்கப்பட்டுள்ளது. தமிழர்களை அழிப்பதற்காகவும் நடத்தப்பட்டதாக, இங்குள்ள தமிழ் ஆர்வலவர்கள் கட்டுரைகளை எழுதுகிறார்கள். ஆனால் குண்டு வைத்த இஸ்லாமியர்களை தண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்க தயக்கம் காட்டுகிறார்கள்.
பிரான்ஸ் நாட்டில் பர்தாவிற்கு தடை விதித்த போது, தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஆர்பாட்டங்களை நடத்தினார்கள். இந்த ஆர்பாட்டத்திற்கு தி.மு.க. தி.க. உள்ளிட்ட தமிழ் இயக்கங்கள் ஆதரவளித்தன. ஆனால் இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின், அந்த நாட்டு அரசு பர்தாவிற்கு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பிரிவினைவாதிகள் குரல் எழுப்பவில்லை. ஏன் எனவும் தெரியவில்லை. ஒரு வேளை, குரல் எழுப்பினால், தங்களையும் பயங்கரவாதிகள் என சிறைபிடித்து விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுடன் தேர்தல் கூட்டு என்ற பெயரில் உறவாடுவதும், அவர்களின் செயல்களுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்புவதும் தங்களது கடமையாக எண்ணி செயல்படுகிறார்கள். இலங்கை குண்டு வெடிப்பின் சூத்தரதாரிகள் கேரளத்தில் தங்கியிருந்ததாகவும், அவர்களில் சிலர் சென்னை மண்ணடியில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுவதை மறுக்கும் விதத்தில் தமிழக அரசும் வாய் திறக்கவில்லை. உண்மையில் தமிழகத்தில் குறிப்பாக கோவை மற்றும் சென்னையில் குண்டு வெடிப்பின் குற்றவாளிகள் தங்கியிருந்தததை பற்றிய முழு சி.பி.ஐ. விசாரனையை கோரி, ஏன் தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக தி.மு.க. கம்யூனிஸ்ட்கள் கோரிக்கை வைக்கவில்லை.
இலங்கையில் நடந்தது தப்பி தவறி தமிழகத்தில் நடந்திருந்தால், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளின் குடுப்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறுவார்கள். உடனடியாக தமிழக அரசின் மீது குற்றத்தை சுமத்தி அரசை ராஜினாமா செய்ய போராட்டங்களை நடத்துவர்கள். பயங்கரவாதிகளின் செயலுக்கு மோடி தான் மூலக் காரணம் என பொய் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதுடன், தங்களது தொலைக் காட்சிகளில் விவாதம் நடத்துவார்கள்.
தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாகவே சித்தரிக்கப்படுகிறது. இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க.வை தவிர மற்ற அரசியல் கட்சிகளும், தமிழ் என்ற பெயரில் உலா வரும் தமிழ் அமைப்பகளும், சுமார் 45 இஸ்லாமிய அமைப்பகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இவ்வாறு தொடர்பிலிருப்பவர்களின் ஆதரவில் பாதுகாப்பாக தீவிரவாதிகள் இருக்கிறார்கள். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் குற்றவாளிக்கு ஈரோட்டில் உள்ள தோல் தொழிற்சாலை எட்டு மாதங்களுக்கு மேலாக பணியில் உள்ளார். ஈரோடு காவல் துறையினருக்கு தெரியாத தகவல், தேசிய புலனாய்வு பிரிவுக்கு தெரிந்து கைது செய்யப்பட்டார். இம் மாதிரி பல சம்பவங்கள் தமிழகத்தில் அவ்வப்போது நடைபெற்றுள்ளது.
எனவே தமிழக காவல் துறை கோவில் மற்றும் வழிபாட்டு தளங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதை விட, தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள், மசூதிகள், மதராஸக்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினால், ஊடுருவிய பயங்கரவாதிகளும் பிடிபடுவார்கள், பயங்கரவாத தாக்குதல் நடப்பதை தடுக்கவும் இயலும்.