வெளிச் சந்தையில் அரிசி விலை உயர்ந்துள்ளதால், ‘பாரத் ரைஸ்’ என்ற பெயரில், கிலோ 29 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு அரிசி விற்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக தமிழகத்திற்கு, 22,000 டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை விற்க, தேசிய வேளாண் கூட்டுறவு இணையம் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தினர் சில தினங்களில், 5, 10 கிலோ மூட்டைகளாக, வேன்களில் எடுத்துச் சென்று, அரிசியை விற்க உள்ளனர்.