டெல்லி 144 தடை உத்தரவை அடுத்து உள்துறை அமைச்சர் உடன் காவல் துறை ஆலோசனை

வடகிழக்கு டெல்லி ஜப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
வன்முறை கும்பல் கல்வீசியதில் போலீஸ் துணை கமிஷனர் அமித் சர்மாவுக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. பல போலீசாரும் காயம் அடைந்தனர். காயமடைந்த போலீசார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த போலீஸ் ஏட்டு ரத்தன்லால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை  5 ஆக அதிகரித்துள்ளது. அதனால் தற்போது 144 தடை விதிக்க பட்டுள்ளது
இந்த நிலையில், டெல்லியில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலை  தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நள்ளிரவு டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.