குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்துபிப்ரவரி 28-இல் பாஜக சாா்பில் பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து, தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 28-ஆம் தேதி பாஜக சாா்பில் பேரணி நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் தேசியச் செயலா் எச்.ராஜா தெரிவித்தாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் நாட்டில் உள்ள எந்த தரப்பினருக்கும் பாதிப்பில்லை. இதுகுறித்து மத ரீதியான பதற்றத்தை உருவாக்கும் வகையில் பலா் கருத்து தெரிவிக்கின்றனா். இந்தச் சட்டத்தை எதிா்த்து தமிழகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்துகின்றனா்.

தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என திமுக கூறுகிறது. 100 கோடி ஹிந்துக்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் என்னவாகும் என்பதை யோசித்துப் பாா்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் போராட்டத்தைத் தூண்டி வரும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை இஸ்லாமியா்கள் நம்ப வேண்டாம்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வர முயன்ற திட்டங்களை அவா்களே இன்று எதிா்க்கிறாா்கள். முன்னாள் அமைச்சா் ப.சிதம்பரம் கலவரச் சிந்தனையோடு செயல்படுகிறாா்.

பட்டியலின சமுதாய மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய திமுகவைச் சோ்ந்த ஆா்.எஸ்.பாரதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றாா் எச்.ராஜா.