பிரதமர் மோடி அரசின் வெளியுறவுத்துறை கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று பிரிட்டன் எம்பி வலியுறுத்தினார். ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கியதை அடுத்து பாகிஸ்தான் இதை எதிர்க்க உலக நாடுகளிடத்தில் ஆதரவு கேட்டது. சீனாவை தவிர எந்த ஒரு நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. சீனாவும் கூட பாகிஸ்தானுக்கு முழு ஆதரவைத் தெரிவிக்கவில்லை சிண்டு முடிக்கும் வேலையையே பார்த்தது. ஆனால் பாரதத்திற்கு உலக நாடுகள் பல தானாகவே முன்வந்து ஆதரவு தெரிவித்தது குறிப்பாக முஸ்லிம் நாடுகளிலும் ஆதரவு வந்து கொண்டே இருந்தது.இதை பாகிஸ்தானே ஒப்புகொண்டு புலம்பியது. தற்போது ஒரு படி மேலே போய் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்தும் பாகிஸ்தான் வெளியேற வேண்டுமென்று பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன் கூறியுள்ளார். இவர் பிரிட்டனில் பங்கேற்ற காஷ்மீர் பண்டிட் சமுகத்தினர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் பேசும்போது ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் பிராந்தியம் முழுவதும் பாரதத்திற்கே சொந்தமானது. அதனால் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதியை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்று கூறினார் மேலும் இதற்கு ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும் வலியுறுத்தினார். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பிரதமர் மோடி உறுதியான முடிவை எடுத்துள்ளார் என்று பாராட்டினார். இதன்மூலம் பாரதத்தில் தலைமை வலுவாக உள்ளதை சர்வதேச அளவில் உணர்த்துவதற்கு சான்றாக இது அமைந்தது என்றார்.