ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் நிலைக்கு பிரான்ஸ் பங்களாதேஷ் ஆதரவு

ஜம்மு காஷ்மீர் பிரச்சனைஇந்தியா பாக்கிஸ்தான் ஆகிய இருநாடுகளின் பிரச்சனை அதில் மற்ற நாடுகள் தலையிட அவசியம் இல்லை அதனை அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் மற்றும் வங்கதேசநாடுகள் கருது தெரிவித்தன. அண்மையில் இந்தியா  தனது ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது . அதனை எதிர்த்து பாகிஸ்தான் தனது கூட்டாளியான சீனாவோடு சேர்ந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டுசென்று விசாரிக்கவேண்டும் என்று கோரியது மூடிய அறைக்குள் நடந்த விசாரணையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசினர் அதில் பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு சீனா தவிர்த்து எந்த நாடுகளும் ஆதரவு தெரிவிக்கவில்லை.  இதைத்தொடர்ந்து இந்த தீர்மானம் தோல்வியடைந்தது தற்போது ஒவ்வொரு நாடுகளாக இந்த பிரச்னை குறித்து அறிக்கை கொடுத்து வருகின்றன அதில் பெரும்பாலான நடுகல் அது இந்தியாவின் உள்விவகாரம் என்று பதிலளித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.