ஜனவரி 1 நமக்குப் புத்தாண்டு அல்ல!

தினசரி காலண்டரின் பின்பக்கம் திருப்பிப் பார்த்தால் ஹிந்துக்கள் பண்டிகை, கிறிஸ்தவர் பண்டிகை, முஸ்லிம் பண்டிகை என்ற விபரம் இருக்கும். அதில் கிறிஸ்தவர் பண்டிகையில் முதல் பண்டிகையாக ‘‘ஜனவரி 1 – ஆங்கிலப் புத்தாண்டு’’ என்று குறிப்பிட்டிருக்கும். எனவே ஜனவரி 1 என்பது கிறிஸ்தவ பண்டிகை; அது ஆங்கிலேயனின் பண்டிகை. ஆங்கிலேயன் நாட்டைவிட்டு வெளியேறி சுமார் முக்கால் நூற்றாண்டு ஆன பிறகும் கூட ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவோரின் மனதில் அடிமைத் தனத்தின் தடம் மீதமிருக்கிறது என்றுதான் பொருள்.

நமது முன்னோர்கள் சூரியனையும் சந்திரனையும் மையமாக வைத்து விஞ்ஞான ரீதியான வருடப் பிறப்பைக் கணக்கிட்டார்கள். சூரியனை மையமாக வைத்து புத்தாண்டு என்றால் அது சித்திரை முதல் தேதி, சந்திரனை மையமாக வைத்து புத்தாண்டு என்பது ‘யுகாதி’ .

உலகத்தில் எந்த ஒரு முஸ்லிம் நாட்டிலும் ஜனவரி 1ம் தேதியை வருடப் பிறப்பாகக் கொண்டாடுவதில்லை. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் ஜனவரி 1 – ஐ கொண்டாடுவதில்லை.

ஆங்கிலேயனுக்கு ‘நாள் துவக்கம்’ என்பது இரவு 12.00 மணி என்பதை  புத்தாண்டு இரவு 12.00 மணிக்கு கொண்டாடுகிறவர்கள் மறந்து விட்டார்களா? நமக்கு அந்த நேரம் பேய், பிசாசுகள் நடமாடும் நேரம். நமக்கு சூரிய உதய நேரம்தான் நாள் துவக்கம் என்பது.

ஜனவரி 1 – ம் தேதிக்கு முந்தைய இரவு 12.00 மணிக்கு கோயில்களை திறந்து வைத்திருப்பது ஆகம விரோதம். ஜனவரி முதல் தேதி உறவினர்கள், நண்பர்களுக்கு ‘‘விஸ் யூ எ ஹேப்பி நியூ இயர்’’ என்று சொல்வது அபத்தம்.

கடந்த சில ஆண்டுகளாக புத்தாண்டை வரவேற்கிறோம் என்ற பெயரில் சென்னை கடற்கரையிலும்  ஐந்த நட்சத்திர ஹோட்டல்களிலும் குடித்து கும்மாளம் அடிக்கிற கூத்துக்கள் சொல்லி மாளாது. இந்நிலை மாறவேண்டும். இதை ஹிந்துக்கள் உணர்வார்களா?

One thought on “ஜனவரி 1 நமக்குப் புத்தாண்டு அல்ல!

  1. இதுவரை ஆங்கில புத்தாண்டு கொண்டாட விருப்பம் இல்லை. ஆனால் நீங்கள் சொன்னதில் இருந்து அடுத்த ஆண்டு முதல் ஆண்ங்கில் புத்தாண்டு கொண்டடுவேன். அதுவும் நீங்கள் சொல்லும் பேய் பிசாசுகளை காண.தேவை ஏற்பட்டால் அந்த பேயக்ளுடன் கொண்டாடுவேன்… நன்றி………….!

Comments are closed.