ஒரு டாக்டரின் மகனாக கல்கத்தாவில் பிறந்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். வயதைக் காரணம் காட்டி, அவரது வெற்றியை ரத்து செய்தது ஆங்கில அரசு. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தேர்வெழுதி வெற்றி பெற்றார். சில்ஹட் நகரில் துணை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அதில் இருந்தும் நீக்கப்பட்டார். மக்கள் உரிமைகளைப் பெறவும், அநீதியில் இருந்து காத்துக்கொள்ளவும், அரசு நிர்வாகத்தில் பங்கு பெறவும் ஓர் அமைப்பு அவசியம் என்று கருதினார்.
மெட்ரோபாலிட்டன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1882ல் ரிப்பன் கல்லூரியை தொடங்கி 37 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். கோபால கிருஷ்ண கோகலே, சரோஜினி நாயுடு போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டார். காங்கிரஸ் தலைவராக 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். போராட்டம், பொதுக்கூட்டம், மனு கொடுப்பது, சட்டரீதியிலான நடவடிக்கை என மிதவாதப் போக்கையே பின்பற்றினார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தைகூட ஏற்க மறுத்தார். ஒரு கட்டத்தில் தீவிர அரசியலில் இருந்து விலகினார்.