சீன பொருட்கள்; ஒரு நினைவூட்டல்

சில தினங்களாக சீன அலைபேசிகளில் நம் பாரதத்தின் லடாக், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட இடங்கள் தெரிவதில்லை என புகார்கள் வருகின்றன. நாம் வாங்கும் சீன அலைபேசிகள், அதில் உள்ள நம் தகவல்கள் சீன கட்டுப்பட்டில் உள்ளதையே இது காட்டுகிறது. இது சீனா நம் தேசத்தின் மீது நடத்தும் டிஜிட்டல் போர்.

கடந்த ஜூனில், 20 பாரத ராணுவ வீரர்கள் எல்லையை காக்க சீனர்களுடன் போரிட்டு உயிரிழந்தனர். அப்போது சுதேசி பொருட்கள் பயன்பாடு, சீன பொருட்கள் புறக்கணிப்பு மனோபாவம் தன்னெழுச்சியாக மக்களிடம் பிறந்தது.

ஆனால் அந்த எழுச்சி மெல்ல மறைந்துவருகிறதோ என எண்ணத் தோன்றும் அளவுக்கு சீன பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
நவராத்திரி, தீபாவளி, பொங்கல் என நமக்கு பல விழாக்கள் உள்ளன. இதில் விளக்குகள், பட்டாசு, பொம்மை, பரிசு பொருட்கள், அலைபேசி என பல பொருட்கள் விற்பனையாகும். கண்டிப்பாக இதில் சீன பொருட்கள் ஊடுருவலும் இருக்கும்.

தேச பக்தியுடன், இவற்றை நாம் தவிர்ப்பதுடன், மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டும். சீன பொருட்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை விட, நாமும் முயற்சிக்க வேண்டும்.

‘ஜப்பான் மீது அமெரிக்கா குண்டு போட்ட பிறகு அவர்களால் அங்கு ஒரு குண்டூசி கூட அங்கு விற்க முடியவில்லை. அரசு தடை விதிக்கவில்லை என்றாலும் மக்களின் தேச பக்தியால் இது சாத்தியமாயிற்று’ என்பார்கள். இது நமக்கு ஒரு பாடம்.

இனி, சீன பொருட்களை வாங்கும் முன்பு நம் ராணுவத்தினரின் தியாகம் ஒருமுறை நம் கண்முன் வரட்டும்.