சில பயணங்கள்.. சில பதிவுகள்.. மேலும் சில பதிவுகள்…

இந்திய வரலாற்றில் திருப்பம் நிகழ்த்திய ஆண்டு 1971. வடக்கில் இருக்கும் இந்திரா காந்தி, டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றி, பிரதமராகி கட்சியை தனதாக்கிக் கொண்டார். அதே ஆண்டில் இருபது வயது வாலிபன் ஒருவன் தேசியத்தில் வளர்ந்தவன், ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்புக்குள் அடியெடுத்து வைத்தான். அவனுள் ஏற்பட்ட மாற்றத்தை வர்ணிக்க தமிழ்ச்சொல் தெரியாததால், ஆங்கிலத்தில் எழுதுகிறேன். It was a Paradigm shift.
புதிய களம், புதிய பார்வை, புதிய தொடர்புகள், புதிய சிந்தனை என்று சுப்பு மீண்டும், மீண்டும் சலவைக்குப் போடப்பட்டு வெளியே வந்தான். இந்த வேலை சத்தம் இல்லாமல் நடந்தது. இந்தப் புதிய தொடர்புகளில் முக்கியமானவர் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த மாம்பலம் வாசு. வாசுவுக்கு வீடு, மேற்கு மாம்பலத்தில். ஆனால் அவருடைய நோக்கம் அகண்ட பாரதத்தில், ஒவ்வொரு நாளின் நிகழ்விலும், சங்கத்தின் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்பவர். அவசரநிலை காலத்தில், பல முக்கிய
ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் அரசின் கண்களில் படாமல் இருக்க அவர் வீட்டில்தான் தங்கியிருந்தனர்.
வாசு நடத்திக் கொண்டிருந்த போனபாட் அண்ட் கோ நிறுவனத்தில், நான் விற்பனையாளராகச் சேர்ந்தேன். என்னுடைய முதல் கஸ்டமர் அம்பத்தூரில் இருக்கும் டன்லப் டயர்ஸ் தொழிற்சாலை. அதிகாலையில் எழுந்து மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்திற்கு போய், நண்பர்களோடு உரையாடி, அங்கிருந்து பஸ் பிடித்து அம்பத்தூர். அம்பத்தூரிலிருந்து கண்டக்டரோடு சண்டை போட்டுக் கொண்டு, பழைய அம்பத்தூர் டன்லப் தொழிற்சாலை.
டன்லப் அதிகாரி ஏடாகூடமாகக் கேள்வி கேட்டதில், எனக்கு சூடேறி விட்டது. விற்பனை என்பது மறந்து போய், நானும் பதிலுக்கு எகிறி விட்டேன். நிச்சயம் ஆர்டர் கிடைக்காது என்று தெரிந்து விட்டது. அடுத்த பஸ் ஏறி மாம்பலம் வந்து வாசுவைப் பார்த்தேன். நடந்ததை மறைக்காமல் அவரிடம் சொன்னேன்.
சரி, இந்த வேலை இத்தோடு முடிவடைந்தது என்பதுதான் என்னுடைய நினைப்பு. ஆனால் வாசு வித்தியாசமானவர் சிரித்துவிட்டு வாசு சொன்னது: “நீ பரவாயில்லையே அவரைத் தாக்கி விட்டு வந்திருக்கிறாய் தைரியசாலி தான்.
என்னுடைய முதல் நாள் வேறுவிதமாய் இருந்தது. எனக்குத் தயக்கம் அதிகம். நான் விற்பனை செய்ய வேண்டிய பொருள் குளியல் அறையில் பயன்படுத்தும் பாத் டப். அதைத் தூக்கிக் கொண்டு மார்க்கெட்டில் அலைய முடியாது என்பதால், பல கோணங்களில் வண்ணமயமாக்கி படம் எடுத்து ஆல்பத்தோடு போவேன். முதல் நாள் முதல் கஸ்டமர் சைதாப்பேட்டையில் உள்ள வி.ஜி.பி ஷோரூம். கடை வாசல் வரை போனவன் மனதில் துணிவின்றி கடையை கடந்து போய் விட்டேன். பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கடை அருகே வந்து பயந்து மேலே சென்று விட்டேன். மூன்றாவது முறையாக கடையை கடக்கும் போது. உள்ளிருந்து வந்த ஒருவர்.
‘சார் என்ன வேண்டும்’ என்று சொல்லி என்னை உள்ளே இழுத்துக் கொண்டார். அப்புறம் நான் தைரியமாகக் குளியல் தொட்டியின் சிறப்புகளைப் பேச ஆரம்பித்தேன்”. வாசு ஆதரவாக. ஆதரவு நீடிக்கிறது.

வரலாற்றை குறிப்பாகத் தமிழ் இதழியல் வரலாற்றை அவரவர் சௌகரியப்படி வகுத்துக் கொள்கிறார்கள். இன்றைய மண்டகப்படி என்னுடையது. சுதந்திரத்துக்கு முன்னும், பின்னும் உள்ள காலத்தை கல்கி காலம் என்று சொல்லலாம். 1960களில், கோப்பை ஆதித்தனார் கைக்குப் போய்விட்டது.
1970களில், துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி. 1980களில் விகடன் குழுமம் என்று வளர்ந்த தமிழ் மீடியா, 1990 களில் டிஜிட்டல் மீடியாவை எதிர்கொள்ள வேண்டி வந்தது. எழுத்து ஊடகத்திற்கும், காட்சி ஊடகத்திற்கும் ஏற்பட்ட மோதலில் காட்சி ஊடகத்துக்கே வெற்றி. புத்தாயிரத்தின் முதல் 20 ஆண்டுகளில் வீடு தோறும், குடிசை தோறும் சன் டி.வி ஆதிக்கம். ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு ஆளுமை. தரம்பார்த்துத் தரவுகளைச் சரி பார்த்துத் தரவேண்டிய ஊடகத்தின் செயல்பாடுகள் குறித்து இரண்டு நிகழ்வுகள்.
தினத்தந்தி அதிபரான ஆதித்தனார் பத்திரிகையாளருக்குத் தரும் பயிற்சி புதுமையாக இருக்கும். புதிதாக வேலைக்கு வந்த ரிப்போர்ட்டர், தான் சேகரித்து எழுதி வந்த ரிப்போர்ட்டை ஆதித்தனாரிடம் படித்துக் காட்ட வேண்டும். அதற்குள் வாசலில் இருக்கும் காவலாளி வரவழைக்கப்படுவார். ரிப்போர்ட்டர் படிப்பதை காவலாளி கேட்க வேண்டும். அவருக்கு புரிந்து விட்டால் ஓகே.. இல்லாவிட்டால் ரிப்போர்ட்டர் திரும்பவும் விளக்கமாக எழுத வேண்டும். இது ஆதித்தனார் ஸ்டைல்.
சாவியின் ஸ்டைலை பற்றி சொல்கிறேன். ஒரு புதிய பத்திரிகை ஆரம்பிப்பது என்று முடிவு செய்து ஆசிரியர் குழுவை தேர்வு செய்து, எல்லோரையும் பெங்களூருக்கு அழைத்துப் போனார் சாவி. ஹோட்டலில் இரவு தங்கல். காலையில் 10 மணிக்குத் தனி அறையில் புது பத்திரிகை குறித்து அலசல் என்பதாகத் திட்டம். இரவு நேரம் பெங்களூரு குளிர். இதை ஊக்கப்படுத்த எல்லோரும் சாப்பிட்டு உறங்கி விட்டார்கள். காலை 11:00 மணிக்கு சந்திக்க வேண்டிய அறையில் சாவி மட்டும்தான் இருந்தார். சாவி என்ன செய்தார் தெரியுமா. எல்லோருக்கும் டிக்கெட் வாங்கிக் கொடுத்து, ஊருக்கு அனுப்பி விட்டார். பத்திரிகை ஆரம்பிக்காமல் இழுத்து மூடப்பட்டது.
இத்தகையத் தமிழ் சூழலில் பிறந்தார் ரங்கராஜ் பாண்டே (1975). அவர் பிறந்த போது, தமிழ் மீடியாவின் தலைமகனாக இருந்தவர் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி. தினமலரில் பத்திரிகையாளராக பாண்டே வேலையைத் தொடங்கிய போது (1999), ஆனந்த விகடன் குழுமம் முன்னணியில் இருந்தது. இடதுசாரி கும்பல்களின் எதிர்ப்பை மீறி, ஜூனியர் விகடன் இதழில் ஆசிரியர் மதன் எழுதிய ‘வந்தார்கள் வென்றார்கள்’ தொடர் புத்தகமாகவும் வந்து, எழுத்துலகில் ஹிந்து மறுமலர்ச்சிக்கு முதல் படியாக அமைந்தது.
தினமலரில் தன்னைத் தயார் செய்து கொண்ட பாண்டே, அங்கிருந்து விலகி 2012ல் தந்தி டி.வியில் சேர்ந்தார். கல்கி ஆதித்தனார், சாவி, சோ, மதன் ஆகிய அனைவரிடமிருந்தும் கொஞ்சம் எடுத்துக் கொண்டார். சொந்த சாஹித்தியமும் உண்டு.
இன்று தன்னுடைய தயாரிப்பான சாணக்யா டிவியை வெற்றிகரமாக நிர்வகித்து வரும் ரங்கராஜ் பாண்டே, இன்று தமிழ் மீடியாவின் மாஸ்காட். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து, ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட ஒருவர், இவ்வளவு உயர்ந்ததற்கு காரணம் அவரின் நம்பிக்கை, உழைப்பு மற்றும் தமிழ் மக்களின் ஆசி.
இன்றைய தேதியில், சனாதன தர்மத்தின் எதிரிகளை சரியான முறையில் கையாள்பவர், பாண்டே தான் என்று சொல்லலாம். அவருடைய புத்தகம் கருப்பு சிவப்பு காவி / ரங்கராஜ் பாண்டே / கிழக்குப் பதிப்பகம். ஒரு பக்கம் சுப. வீரபாண்டியன், இன்னொரு பக்கம் தொல். திருமாவளவன். அடுத்தடுத்தோ, ஒன்றாகவோ அவர்களோடு மோதுகிறார், பாண்டே.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இணைய வழிக் கருத்தரங்கம் ஒன்றில், பெரும் சர்ச்சைக்குரிய விஷயம் ஒன்றைச் சொன்னார். பெண்கள் அனைவரையும் விபச்சாரிகளாக இறைவன் படைத்தான் என்று மனுஸ்மிருதி சொல்கிறது. ஹிந்து சனாதன தர்மத்தின் படி, பெண்கள் அனைவருமே விபச்சாரிகளே என்று சொன்னார். இதன் மூலம் இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்களையும், அதன் தலைமை பதவியில் இருந்த டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் சேர்த்து சர்ச்சைக்கும், இழிவுக்கும் உள்ளாக்கியிருக்கிறார். அந்த சர்ச்சையை தொடர்ந்து மனுதர்மம், மனுஸ்மிருதி என்ற வார்த்தையை கூகுளில் தேடிப் பார்த்தவர்கள் அதிகம்.
அந்த வார்த்தையை அதற்கு முன் பத்து பேர் தேடி இருக்கிறார்கள். அன்றைக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேடிப் படித்து இருக்கிறார்கள். அதுவரை யாருமே கண்டு கொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டிருந்த மனுதர்மத்தை அதிகம் பேர் கவனத்திற்கு கொண்டு வந்ததே அண்ணன் திருமாவளவன் தான். ஆக அவர்களுடைய விருப்பம் மனுஸ்மிருதியை எதிர்ப்பதா அல்லது அதிகம் பேரிடம் கொண்டு செல்வதா? விருப்பம் எதுவாக இருந்தாலும், நடந்தது என்ன என்பது அந்த கூகுள் புள்ளி விவரத்தில் இருந்து, நன்கு தெரிய வருகிறது (பக்கம் 107).
சிவப்பு, மஞ்சள் என்று இரண்டு நிறங்கள் இருந்தால், ஒரு நிறம் மேம்பட்டது, இன்னொன்று கீழானது என்ற பொருள் இல்லை. அவை இரு வேறு நிறங்கள் அவ்வளவே. இதற்கு மிகச் சமீபத்தில், சுப. வீரபாண்டியன் ஒரு அர்த்தத்தை சொல்லி இருக்கிறார். அதை பிறகு பார்ப்போம். ஆனால் இன்று ஆரியம், திராவிடம் என்பது ஒரு கருத்தியல் தத்துவமாக புழங்கப்படுகிறது. இதற்கு அறிவியல் ஆதாரம் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்! கால்டுவெல் சொன்னார் என்றும், திராவிட ஒப்பிலக்கணம் என்றெல்லாம் கூறப்படுகிறது. (பக்கம் 125, 126)
தொடரும்…இந்திய வரலாற்றில் திருப்பம் நிகழ்த்திய ஆண்டு 1971. வடக்கில் இருக்கும் இந்திரா காந்தி, டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றி, பிரதமராகி கட்சியை தனதாக்கிக் கொண்டார். அதே ஆண்டில் இருபது வயது வாலிபன் ஒருவன் தேசியத்தில் வளர்ந்தவன், ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்புக்குள் அடியெடுத்து வைத்தான். அவனுள் ஏற்பட்ட மாற்றத்தை வர்ணிக்க தமிழ்ச்சொல் தெரியாததால், ஆங்கிலத்தில் எழுதுகிறேன். It was a Paradigm shift.

கட்டுரையாளர் : சுப்பு
தொடரும்…