சுவாமி விவேகானந்தரின் குரு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அவர் ஒருநாள் ஒரு புல்வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். திடீரென்று திரும்பி பார்த்தார். அப்போது தான் நடந்து வந்த பாதையில் தனி காலில் கீழ் மிதிபட்ட புற்கள் மிகுந்த சிரமத்துடன் தலையை நிமிர்ந்த முயற்சி செய்வதைக் கண்டார். இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் அவர் கண் கலங்கினார். ‘‘அடடா! இவைகளிடமும் உணர்ச்சி இருக்கின்றனவே. அதனால் அல்லவா இவை மிகவும் துன்பப்படுகின்றன’’ என்று நினைத்தார். அன்று முதல் புல்வெளியில் நடப்பதை நிறுத்திவிட்டார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒருநாள் நடந்து சென்று கொண்டிருந்தார். நல்ல மழை. குளங்கள், வாய்க்கால்கள் நிரம்பி வடிந்தன. தண்ணீர் சாலையில் பெருக்கெடுது ஓடியது. நிறைய மீன்கள் சாலைகளில் சிக்கித் தவித்தன. மக்கள் அவைகளை பிடித்து வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். ஒரு மீன் மட்டும் ராமகிருஷ்ணரின் பாதங்களை தஞ்சமடைந்தது. அவர் விலகிச் சென்றாலும் அவரது பாதங்களையேச் சுற்றி வந்தது. அதைக் கவனித்த அவர் அந்த மீனை எடுத்து அருகில் உள்ள குளத்தில் விட்டார். அதுபற்றி அவர் குறிப்பிடும்போது
‘‘இப்படி இறைவனைச் சரண்டையும் ஒருவருக்கே பாதுகாப்பு கிடைக்கிறது’’ என்றார்.