சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸிஸ், திங்கள் மாலை முதல் 21 நாட்கள் நாட்டில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.ஊரடங்கு உத்தரவின் கீழ் குடிமக்களும் குடியிருப்பாளர்களும் காலை 7 மணி முதல் காலை 6 மணி வரை தங்கள் வீடுகளுக்கு வெளியே செல்ல வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த உள்துறை அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும், மேலும் இது தொடர்பாக அனைத்து உள்ளுர் மற்றும் ராணுவ அதிகாரிகளும் அமைச்சகத்துடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவின் போது குடிமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், தடை இல்லாத நேரத்தில் தீவிர தேவை ஏற்பட்டால் தவிர, வெளியே செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.