சர்.சி.வி ராமன்

சந்திரசேகர வேங்கட ராமன், தமிழகத்தில் உள்ள திருச்சியில் பிறந்தார். படிப்பில் முதல் மாணவனாக திகழ்ந்த இவர், கல்லூரியில் இயற்பியலுக்கான தங்கப்பதக்கதையும் பெற்றார். பாரதத்தில் அக்காலக்கட்டத்தில் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. அதனால், இந்திய நிதித் துறையில் சேர்ந்தார். அலுவலக நேரம் முடிந்த பிறகு, கல்கத்தாவில் அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டார். அவரது ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது. லண்டன் ராயல் சொசைட்டியால் அவர் 1924ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929ல் பிரிட்டிஷ் அரசால் ராமனுக்கு “நைட் ஹீட்” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது. 1930ல், ‘ஒளிச் சிதறல்’ ஆராய்ச்சிக்காக ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. இதற்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது. 1947ல் ராமன் சுதந்திர பாரதத்தின் புதிய அரசால் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, அங்கு அவர் தனது மரணம் வரை பணிபுரிந்தார்.