சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய நாட்டின் வரிசையில் தற்போது இந்தியா – அமித்ஷா

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, மாநிலத்தின் பல பகுதிகளில், தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொல்கத்தாவிற்கு நேற்று வந்தார். மேலும் அவர் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள, என்.எஸ்.ஜி., எனப்படும், தேசிய பாதுகாப்புப் படையின் கட்டடத்தை திறந்துவைத்தார்.

அங்கு, அவர் பேசியதாவது: தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க, எதிரியின் எல்லைக்குள் நுழைந்து, தாக்குதல் நடத்திய நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை மட்டுமே இருந்தன. ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ மற்றும் பாலக்கோட் தாக்குதலுக்குப் பின், அந்த பட்டியலில், இந்தியாவும் இணைந்துள்ளது. பிரதமர் மோடி தலைமை யின் கீழ், துடிப்பான பாதுகாப்பு கொள்கையை, நாம் உருவாக்கியுள்ளோம். பயங்கரவாதத்தை பொறுத்தவரை, நம் நாடு, சகிப்புத்தன்மைக்கே இடமளிப்பதில்லை.

 

amitsha, பாலக்கோட் தாக்குதல், இஸ்ரேல், அமித் ஷா , மம்தா, பிரசாரம், சிறுபான்மை மக்களை,குடியுரிமை திருத்த சட்டம்

வீரர்களுக்கு உணவு பரிமாறிய அமித்ஷா

அடுத்த ஐந்து ஆண்டுகளில், தேசிய பாதுகாப்புப் படையினர், அரசிடம் வைக்கும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். பயிற்சி, நவீன ஆயுதங்கள், வசதிகள் என அனைத்திலும், தேசிய பாதுகாப்புப் படை மேம்படுத்தப்படும். இவ்வாறு, அவர் பேசினார். இதைத் தொடர்ந்து, கோல்கட்டாவில் நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கி வைத்தார்.