‘சந்திரயான் – 2’ சிக்னல் துண்டிப்பு

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம், நிலவில் தரையிறங்க 2 கி.மீ., தூரம் இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்தது லேண்டர் உடனான தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சந்திரயான் 2 விண்கலத்துடனான தொடர்பு 5 சதவீதம் மட்டுமே இழந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டர் சாதனம் நிலவில் தரை இறங்குவது மிகவும் சவாலான பணி என்பதை உணர்ந்த விஞ்ஞானிகள் பதட்ட நிலையோடு இருந்தனர் இன்று அதிகாலை 2.15 மணி அளவில் லேண்டர் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் இருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை காண பிரதமர் மோடி நேற்று இரவு பெங்களூர் சென்றிருந்தார் சிக்னல் துண்டிக்கப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மீண்டும் காலை 8 மணி அளவில் இஸ்ரோ மையத்திற்கு வந்த பிரதமர்,  இஸ்ரோ தலைவர் சிவன் கஸ்தூரிரங்கன் உள்ளிட்ட விஞ்ஞானிகளிடம் கலந்துரையாடினார் விஞ்ஞானிகளை ஊக்கம் அளிக்கும் வகையில் அவர்களை பாராட்டி நம்பிக்கையான வார்த்தைகளை பேசினார் பிரதமரின் உரையை கேட்ட பெண் விஞ்ஞானிகள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர் உரையை நிறைவு செய்து புறப்பட்ட மோடி உங்களின் கனவுகளும் திட்டங்களும் என்னைவிடவும் வலிமையானவை உங்களை சந்தித்து உரையாற்ற வந்தேன் ஆனால் உங்களிடமிருந்து ஊக்கத்தை பெற்றுக் கொண்டேன் என விஞ்ஞானிகளிடம் தெரிவித்தார். பிரதமரை வழியனுப்ப சென்ற இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார் அவரை கட்டியணைத்து பிரதமர் மோடி தேற்றினார் ஆறுதல் வார்த்தைகளை கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.