கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூரில் ஒரு தெலுங்கு குடும்பத்தில், செப்டம்பர் 3, 1957-இல் சுசீலா மற்றும் டாக்டர் வாசுதேவ் தம்பதியினருக்கு ஜகதீஷ் பிறந்தார். நான்காவதாக பிறந்த இவருக்கு ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் உண்டு.
சத்குருவின் தந்தை இந்திய ரயில்வேயில் கண் மருத்துவராகப் பணிபுரிந்ததால், அவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்து செல்ல வேண்டியிருந்தது. ஜகி என்று அழைக்கப்பட்ட ஜகதீஷ், சிறு வயதிலேயே இயற்கை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார்.. இவர் 11 வயதில், மல்லடிஹள்ளி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிஜியை சந்தித்து, அவரிடம் எளிய யோகாசனங்களைக் கற்று, தவறாமல் அவற்றைப் பயிற்சி செய்து வந்தார். பள்ளிப் படிப்பை முடித்தபின், மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டதாரி ஆனார். கல்லூரி நாட்களில் பயணம் செய்வதிலும் மோட்டார் பைக்குகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சத்குரு..
அவருடைய 25 ஆம் வயதில், செப்டம்பர் 23, 1982 இல் சாமுண்டி மலைக்கு பைக்கில் சென்றார். அங்கு ஒரு பாறை மீது அமர்ந்தபோது ஒரு ஆழமான ஆன்மீக அனுபவத்தைப் பெற்றார். சத்குரு அந்த அனுபவத்தை விவரிக்கையில், “என் வாழ்க்கையில் அந்த நொடி வரை இது நான் என்றும், அது வேறொருவர், அது வேறொன்று என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் முதல்முறையாக எது நான், எது நானில்லை என்று எனக்கு புரியாமல் போனது. ஒரு பத்து பதினைந்து நிமிடம் இப்படி இருந்திருப்பேன் என்று நினைத்தேன். ஆனால் பழைய நிலைக்கு திரும்பியபோது, சுமார் நான்கரை மணி நேரம் கழிந்திருந்ததை உணர்ந்தேன். இந்த அனுபவம் கிடைத்து
1983 இல் 7 பங்கேற்பாளர்களுடன் தனது முதல் வகுப்பை மைசூரில் நடத்தினார். சிறிது காலத்தில், கர்நாடகா மாநிலத்திலும் ஐதராபாத்திலும பல யோகா வகுப்புகள் நடத்தினார்.. இந்த ஆரம்ப கால வகுப்புகளே, பிற்காலத்தில் ஈஷா யோக வகுப்புகளை வடிவமைக்கும் அடித்தளமாய் அமைந்தன.
பிற்காலத்தில் ஈஷா யோக மையம் நிறுவப்படவிருக்கும் ஊரான கோவையில் தனது முதல் வகுப்பினை 1989 இல் நடத்தினார். ‘சஹஜ ஸ்திதி யோகா’ என்று அப்போது அழைக்கப்பட்ட அந்த வகுப்புகளில் ஆசனங்கள், பிராணாயாம கிரியாக்கள் தியானம் கற்றுத்தரப்பட்டது. 1993 இல் அவர்களுக்கு உறுதுணையாக ஒரு ஆசிரமம் நிறுவ வேண்டுமென சத்குரு தீர்மானித்தார். கோவையிலிருந்து 40 கி.மி. தூரத்தில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 13 ஏக்கர் நிலப்பரப்பை தேர்வு செய்தார். 1994 இல் அந்த இடத்தைப் பதிவு செய்து யோக மையம் ஒன்றை நிறுவினார்.
1994-இல் சத்குரு ஆசிரம வளாகத்தில் முதல் யோக வகுப்பை நடத்தியபோது, தியானலிங்கத்தைப் பற்றி பேசினார். சத்குருவுடைய குரு அவரிடம் தியானகலிங்கத்தை பிரதிஷ்டை செய்யச்சொல்லி ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றுவதே , அவர் வாழ்க்கையின் நோக்கமாக இருந்தது 1996-இல் லிங்கத்திற்கான கல் ஆசிரமத்திற்கு கொண்டுவரப்பட்டது. மூன்று வருடத்திற்குப் பிறகு, 23 ஜூன் 1999-இல் தியானலிங்க பிரதிஷ்டை நிறைவு பெற்று, நவம்பர் 23 ஆம் தேதி பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது…
சத்குரு துவங்கிய பசுமைக்கரங்கள் திட்டம், நம் சுற்றுச்சூழலை பாதுகாத்து தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை 10 சதவிகிதம் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுசூழல் பாதுக்காப்பிற்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘இந்திரா காந்தி பரியவரண் புரஸ்கார்’-ஐ ஜூன் 2010 இல், இந்திய அரசாங்கம் இத்திட்டத்திற்கு வழங்கியது.
இதுவரை சுமார் 8.2 மில்லியன் மரக்கன்றுகளை 2 கோடி தன்னார்வத் தொண்டர்கள் மூலம் நட்டு இத்திட்டம் சாதனை படைத்துள்ளது.. 2010 வரை சுமார் 4200 கிராமங்களில் உள்ள 70 லட்சம் மக்களை கிராமப் புத்துணர்வு இயக்கம் சென்றடைந்துள்ளது.ஈஷா வித்யா, இந்தியாவின் கிராமப்புறங்களில் கல்வியையும் படிப்பறிவையும் மேம்படுத்த ஈஷா அறக்கட்டளை துவங்கியுள்ள கல்வித்திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் தற்போது தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் இயங்கிக்கொண்டிருக்கும் 8 ஈஷா வித்யா பள்ளிகளில் சுமார் 4050 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்.
.ஈஷா யோகா வகுப்புகளில் பங்கேற்பவர்கள், தியானம், பிராணாயாமம் மற்றும் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சிக்கு தீட்சை பெறுகிறார்கள்.. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மெக்மின்வில் என்ற இடத்தில், 2005 மார்ச் மாதத்தில் ‘ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயன்சஸ்’ நடுவில் தூண்களே இல்லாமல் 39,000 சதுர அடி கொண்டு விளங்கும் மஹிமா ஹாலை, 2008 நவம்பர் 7ஆம் தேதியில் சத்குரு பிரதிஷ்டை செய்தார். பெண்மையின் தெய்வீக அம்சமான லிங்கபைரவியை ஈஷா யோக மையத்திற்கு அருகில் 2010 ஜனவரி 30ஆம் தேதி சத்குரு பிரதிஷ்டை செய்தார்.
. சத்குரு உலகின் முதல் 112 அடி ஆதியோகி திரு உருவச்சிலை ஈஷா மையத்தில் நிறுவி உள்ளார்கள். இது யோகாவின்மூலத்தின்அடிப்படையாககொண்டுவடிவமைக்கப்பட்டது. ஆதியோகி திருஉருவச்சிலை பொதுமக்கள் தரிசனத்திற்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது