பொய் சொல்லியாவது எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற 100 நாள் பயண திட்டத்தை ஆரம்பித்துள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். முதல் நாளிலேயே திருவண்ணாமலை கூட்டத்தில், கறவை மாடு காணாமல் போய்விட்டது என்று மனுவை கணவரை காணவில்லை என மாற்றி படித்துள்ளார். மற்றொரு கூட்டத்தில் மூன்று கிலோமீட்டர் நடந்து சென்று அண்னாதுரைக்கு டீ, பகோடா வங்கி வந்ததாக கூறிய அவர், பக்கோடா வாங்கக் கொடுத்த பணத்தில் திருடியதாக ஒப்புக் கொண்டுள்ளார் ஸ்டாலின். இது தி.மு.கவினரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆரம்பமே இப்படி, இன்னும் போகபோக எப்படியோ, இவர் முதலமைச்சராக வந்தால் என்ன செய்வார் என பொதுமக்களும் பேசுகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இது அதிகமாக கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.