கோவை: சிறப்பாக நடைபெற்ற விஜயபாரதம் தீபாவளி மலர் வெளியீட்டு விழா

‘விஜயபாரதம் தீபாவளி மலர்-2026’ வெளியீட்டு விழா தொழில் நகரமான கோயம்புத்தூரில் 30.10.2026, வெள்ளிக்கிழமை அன்று, கோவை கோ-இந்தியா அரங்கத்தில் நடைபெற்றது. இதயங்கள் அறக்கட்டளையின் தலைவரும் மருத்துவருமான டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் எஸ்.பாலாஜி ஸ்ரீதர், அனன்யா ஷெல்டர்ஸ் நிர்வாக இயக்குநர் உமா மகேஸ்வரி யுவராஜ், சேலம் தேசிய சேவாசமிதி தலைவர் ஆர். ஹரிஹர கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விஜயபாரதம் வார இதழின் ஆசிரியர்
பெ. வெள்ளைத்துரை வரவேற்றார். முதன்மை ஆசிரியர் இராம. நம்பி நாராயணன் தீபாவளி

 

ஜந்தமுத த்தைப் பரப்புவோம் : தவத்திரு பேரூர் அடிகளார்

பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசியுரையின் சுருக்கம்:

மலரை அறிமுகம் செய்தார். பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசியுரை வழங்கினார். சாணக்யா சேனலின் தலைமை நிர்வாகி ரங்கராஜ் பாண்டே சிறப்புரையாற்றினார்.
மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் வி. சண்முகநாதன், ஆர்.எஸ்.எஸ் கோவை மாநகரத் தலைவர் ராஜா, திருப்பூர் மாவட்டத் தலைவர் கார்மேகம், கோவை கோட்ட அமைப்பாளர் அஜய் கோஷ், விஜயபாரதம் கோவை பிரதிநிதி செ.பிரகாஷ், மற்றும் சங்க குடும்ப அமைப்புகளின் நிர்வாகிகள் திரளாக விழாவில் பங்கேற்றனர்.
400க்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட விழாவில், ரங்கராஜ் பாண்டே மலரை வெளியிட, பேரூர் ஆதீனம் அடிகளார் பெற்றுக் கொண்டார். விழாவுக்கு விளம்பர உதவி புரிந்த கார்த்திக் (டெக்கான் கார்வெல்), சதீஷ் (ஆட்ராய்டு டெக்னாலஜிஸ்), ராஜ்மோகன் (ஃபிரண்ட்ஸ் கேட்டரிங்), இணைப்புரை வழங்கிய முனைவர் காயத்ரி, விஜயபாரதம் கோவை பிரதிநிதி செ.பிரகாஷ் ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். படைப்பாளர் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வ.மு. முரளி நன்றி கூறினார். விழாவில் கலந்துகொண்டோரின் உரைகள் இங்கே சுருக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன…

 

 

 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாக் காலம் இது. பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தில் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டுடன் இணைந்து ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவை (ஜூன் 2025) நடத்தியபோது, அதில் அகிலபாரதத் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார் என்பதை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறேன்.
விஜயபாரதம் தீபாவளி மலர் தொழில் முனைவோரை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கிறது. தேசபக்தியையும், பண்பாட்டையும் வளர்ப்பதில் விஜயபாரதம் வார இதழ் பெரும் பங்கு வகித்து வருகிறது. இதற்குமுன் சென்னையில் நடந்த தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருக்கிறேன். இப்போது சென்னைக்கு வெளியே கோவையில் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டை ஒட்டி ‘ஐந்தமுதம்’ என்ற அடிப்படையான ஐந்து ஆதாரக் கோட்பாடுகளை சங்கம் முன்னிலைப்படுத்தி, மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. அந்த ஐந்து அம்சங்களும் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் மிகவும் முக்கியமானவை.
இமயம் முதல் குமரி வரை பாரதத்தில் சமூக நல்லிணக்கம் இயல்பாக இருந்தது. இடைக்காலத்தில் இதில் கீறல் விழுந்துள்ளது. இதனைப் போக்க சமூக நல்லிணக்கத்தை ஐந்தமுதம் முதன்மைக் கொள்கையாகக் கொண்டிருக்கிறது. உடன் பிறந்த நால்வர் மட்டுமல்லாது குகன், சுக்ரீவன், விபீஷணன் என்ற வேற்று குலத்தோரையும் சகோதரனாக ஏற்று “நின்னொடும் எழுவரானோம்” என்றவன் ராமன். “ஒன்றே குலமும் ஒருவனே தேவன்” என்று பாடியவர் திருமூலர். எனவே சகோதரத்துவதை வளர்ப்பது நமது கடமையாகும்.
நமது பாரம்பரியமான கூட்டுக் குடும்ப கலாச்சாராம் சிதைந்துவிட்டது. இப்போது தனிக்குடும்பங்கள் பெருகிவிட்டன. அதைவிட ஆபத்து வீட்டுக்கு ஒரு குழந்தையாக குடும்பம் சுருங்கிவிட்டது. இந்நிலை தொடருமானால் நமது மரபுகளை, கடமைகளைப் பேண முடியாது. எனவே தான் ஐந்தமுதம் குடும்பநலத்தை முன்னிலைப்படுத்துகிறது.
இன்றைய சமுதாயத்தில் கட்டுப்பாடற்ற தன்மை மலிந்து வருகிறது. எப்படியும் வாழலாம் என்ற நோக்கு பெருகிவிட்டது. இதன் விளைவாகவே பொருளற்ற கலகங்கள், போராட்டங்கள் நிகழ்கின்றன. நமக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைக் காக்க வேண்டுமானால், சட்டத்தை மதிக்கும் குடிமகன்களாக இருக்க வேண்டும். அறநெறி அடிப்படையில், நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். இவற்றையே ஐந்தமுதம் நமக்கு நினைவுபடுத்தி இருக்கிறது.
இந்த தீபாவளி மலருக்கு பங்களித்தோர், அணி சேர்த்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்கள் அனைவருக்கும் ஈசன் அருளாசி உண்டு.
இவ்வாறு அடிகளார் பேசினார்.

புண்ணியம் செய்தவர்கள்தான் இந்தியா வர முடியும்
டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்

விழாவுக்கு தலைமை வகித்த டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் பேசியதாவது: மருத்துவக் கல்வி முடித்தவுடன், வெளிநாட்டுக்குச் சென்று பணிபுரிந்து வந்தேன். லண்டனில் மிகப்பெரிய மருத்துவமனையில் பணிபுரிந்தேன். அப்போது சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, மருத்துவக் கல்விக்கு செலவான தொகை குறித்து பேச்சு வந்தது. நான் படித்தபோது ஆண்டுக்கு ரூ. 440 தான் கட்டணம். இத்தனை குறைந்த தொகையில் மருத்துவக் கல்வி அளித்த நாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்ற எண்ணம் பிறந்தது. அப்போதுதான் அங்கிருந்த மருத்துவ சகாக்கள் இணைந்து ‘இதயங்கள் அறக்கட்டளை’யைத் தொடங்கினோம். அதன்மூலமாக, இந்தியாவில் மருத்துவ வசதி பெற இயலாத ஏழைக் குழந்தைகளுக்கு உதவி வந்தோம்.
ஒரு குறிப்பிட்ட நாளில், இந்தியா திரும்புவது என்று முடிவு செய்தேன். அதற்கு அன்னை மீனாட்சியின் அருளே காரணம். அதையடுத்து, அன்னை மீனாட்சியின் அருளால், அர்ஜூன் என்ற ஏழைக் குழந்தையை மரணத்தில் வாயிலிலிருந்து மீட்டேன். அதுவே எனது மருத்துவ சேவை, இந்தியாவில் தொடரக் காரணமானது. இன்று 4,300 குழந்தைகளின் வாழ்வில், எங்கள் சேவை மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள் மட்டும் தான், இந்தியாவுக்குத் திரும்ப முடியும்; இந்தியாவில் சேவை செய்ய முடியும்.
நமது சமுதாயத்தில் அனைவருக்கும் தேசம் முதலில், பிறகே நான் என்ற எண்ணம் வர வேண்டும். எல்லாவற்றையும் அரசே செய்ய முடியாது. தனிமனிதன் முதலில் மாற வேண்டும். மீதமுள்ள 89 சதவீதம் பேர் எதைப் பற்றியும் கவலையற்றவர்களாக இருக்கிறார்கள். மாற்றம் விரும்புவோரின் எண்ணிக்கை, 11 சதவீதமாக மாறினாலே சமுதாயத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். அதுவே இன்றைய தேவை.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் பேசினார்.

வீட்டுக்கு வீடு விஜயபாரதம் செல்ல வேண்டும் இராம.நம்பி நாராயணன் 

 

விஜயபாரதம் தீபாவளி மலரை அறிமுகம் செய்து முதன்மை ஆசிரியர் இராம. நம்பி நாராயணன் பேசியதாவது:
நாமக்கல்லைச் சார்ந்த மூத்த கார்யகர்த்தர் திரு. ஹரிஹரகோபாலன் அவர்கள் தான், இந்த மலருக்கு கருப்பொருள் கொடுத்தவர். முதல் தலைமுறை தொழில்முனைவோரில் சாதனையாளர்களை நேர்காணல் கண்டு தொகுத்து மலராக்கலாம் என்று ஆலோசனை அளித்தவர் அவர் தான். அதுவே இன்று சாமானிய சாதனையாளர் மலராக வெளியாகி இருக்கிறது.
விஜயபாரதம் முதல்முறையாக சென்னையைத் தாண்டி தொழில்நகரமான கோவையில் இப்போது விழா நடத்தி இருக்கிறது. “ஞானம் என்பதோர் நாட்டின் பொருளாம்” என்று பாரத தேசம் குறித்து பாடுவார் மகாகவி பாரதி. உலகிற்கு ஞானத்தை எடுத்துச் சொல்லும் நாடு இது. அந்தவகையில் வெற்றிமிகு பாரதத்தின் சின்னமாக விஜயபாரதம் வெளிவருகிறது. விஜயபாரதத்தின் முற்பிறவிகள் ‘நன்னெறி, தியாகபூமி’ ஆகியவை. இந்த ஆண்டு விஜயபாரதத்தின் 49வது ஆண்டு. அடுத்த ஆண்டு பொன்விழா ஆண்டாகும். சமூக செயல்பாட்டாளர்கள் இரு வகையினர். முதல் வகையினர், கடுமையாக உழைத்து, முன்னேறி, தொழிலில் உயர்ந்து, தங்கள் செல்வத்தால் சமுதாயத்திற்கு பங்களிப்பு நல்குபவர்கள். இன்னொரு வகையினர், வாழ்வில் தோல்வியுற்றவர்கள், அதன் காரணம் தெரியாமல் சமுதாயத்தையே குற்றம் சாட்டி, கலகம் செய்பவர்கள்; தங்களை போராளிகளாக வெளிப்படுத்திக் கொள்பவர்கள். இவர்களில் முதல் வகையினரைப் பெருமைப்படுத்துவதே இந்த ஆண்டு விஜயபாரதம் தீபாவளி மலரின் நோக்கம். பொதுஜன இதழாக விஜயபாரதம் வளர வேண்டும். வீட்டுக்கு வீடு விஜயபாரதம் செல்ல வேண்டும் என்பது நமது விருப்பம். அதற்கு நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.
இவ்வாறு இராம.நம்பி நாராயணன் பேசினார்.

வெற்றிடம் கூடாது கருத்துக்களால் நிரப்புங்கள்: ரங்கராஜ் பாண்டே

சிறப்புரையாற்றிய ‘சாணக்யா’ சேனலின் தலைமை நிர்வாகி ரங்கராஜ் பாண்டே பேசியதாவது: நாட்டிற்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்யும் பல்லாயிரக்கணக்கானோர் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, தன்னைத் தாழ்த்திக் கொண்டு. பிறரை உயர்த்தும் ஆச்சரியகரமான அமைப்பு. இதுபோன்ற அமைப்பு இந்தியாவில் மட்டுமே தோன்ற முடியும். இராம. கோபாலன், இல. கணேசன் போன்ற உயரிய தலைவர்களை இந்த அமைப்பு வழங்கி இருக்கிறது. அவர்களது மகத்தான சேவைக்கு, நமது சமுதாயம் என்ன கைம்மாறு செய்தது? எதுவுமில்லை. ஆயினும், எதையும் எதிர்பாராமல் சங்கம் தேசப்பணியாற்றுகிறது.
ஆர்.எஸ்.எஸ் தோன்றி நூற்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதே காலகட்டத்தில் (1925) தோன்றிய இருவேறு அமைப்புகளின் தற்போதைய நிலையை ஒப்பீட்டால் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சிறப்பு புரியும். ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில் தான். இந்தியாவில் கம்யூனிஸ்டு இயக்கமும். திராவிட இயக்கமும் தோன்றின. இன்று கம்யூனிஸ்டுகள் காணாமல் போய்விட்டார்கள்; திராவிட இயக்கம் அதன் இறுதிக்காலத்தில் இருக்கிறது. பாதையாக இருந்து வருகிறது. கம்யூனிஸ்டுகளுக்கு ஜனநாயகத்தைக் கற்றுக் கொடுத்த இந்தியாவில், கம்யூனிஸம் இப்போது காலாவதியாகிவிட்டது.
ஒருகாலத்தில் தமிழகத்தில் திராவிடம் முக்கியமான சித்தாந்தமாக இருந்தது. ஆனால் இப்போது திராவிடத்தை மறுதலிக்கும் கட்சிகளே அதிகம். இரு பெரிய திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துவிட்டது. இப்படி தேய்ந்துவிட்டது திராவிட இயக்கம்.
ஆனால், ஆர்.எஸ்.எஸ் பெற்ற பிள்ளையான பாஜக மூன்று தேர்தல்களில் தொடர்ந்து வென்று நாட்டை ஆள்கிறது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இதற்கு மாற்றே தென்படவில்லை. இதற்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தியாக மனப்பான்மை தான். இந்த அமைப்பின் பத்திரிகையான விஜயபாரதம் இன்னும் வளர வேண்டும்.
விஜயபாரதம் சாரமுள்ள பத்திரிகை என்பது அனைவருக்கும் தெரியும். இதனை அடுத்தகட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது? நல்ல விஷயங்களை அனைவருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும். இதில் நம்மிடையே தயக்கம் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் வறுமைக்கோட்டுக்குக் கீழிருந்த 49 கோடி பேர், இந்தியாவில் அந்த நிலையிலிருந்து உயர்ந்திருப்பதாக உலக வங்கி சொல்கிறது. இதனை பாஜக அரசு சொல்லவில்லை, உலக வங்கி அறிவித்திருக்கிறது. இதனை நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டாமா?
எந்த ஒரு அமைப்பின் வெற்றிக்கும் மூன்று காரணிகள் முதன்மையானவை − கொள்கை, தலைமை, தளபதிகள். இந்தியாவில் பாஜக உள்ளிட்ட தேசிய இயக்கங்களின் கொள்கைக்கோ, தலைமைக்கோ எந்தக் குறையுமில்லை. ஆனால், தளபதிகள் குறைவாக இருக்கிறார்கள். தலைமைக்கு அடுத்த தளபதிகள் அதிக அளவில் உருவாகும்போது, தமிழகத்தில் தேசிய இயக்கங்களின் செல்வாக்கு உயரும்.
அதுபோலவே கரப்பான் பூச்சிகளின் ஆர்ப்பாட்டங்களைக் கண்டு அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை. வெற்றிடத்தில் தான் கிருமிகளும், கரப்பான் பூச்சிகளும் நுழையும். அந்த வெற்றிடம் உருவாகாமல், உங்கள் சித்தாந்தங்களாலும், கருத்துகளாலும் நிரப்புங்கள். இதுவே சரியான தீர்வு. சிலர் பொய்களையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவை மக்களிடம் பரவுகின்றன. நீங்கள் உண்மையைக் கூட பிரசாரம் செய்யாமல் இருந்தால் எப்படி? எல்லாவற்றையும் மோடியே செய்துவிடுவார் என்று காத்திருக்காதீர்கள். அமைப்பின் தளபதிகளும் மக்களும் இணைந்தால் மட்டுமே நாட்டைக் காக்க முடியும்.
இவ்வாறு ரங்கராஜ் பாண்டே பேசினார்.