கோவிட் சர்வதேச மாநாடு

கோவிட் பெருந்தொற்று தொடர்பான இரண்டாவது சர்வதேச மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘பெருந்தொற்று காலத்தில் பாரதத்தில் பலரும் பாரம்பரிய மருந்துகளை பயன்படுத்தி, நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொண்டனர். உள்நாட்டிலேயே தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டது. பாரதத்தில் உள்ள சுமார் 90 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டுள்ளனர். ஐந்து கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அமைக்கப்படும் உலக சுகாதார அமைப்பின் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையம் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க பெரும் பங்காற்றும்’ என்று கூறினார்.