ஹிந்து அறநிலையத்துறையின்கீழ் உள்ள தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி நரசிங்கநாதர் கோயிலில் இருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட நந்திகேஸ்வரர், கங்காளமூர்த்தி ஆகிய உற்சவ மூர்த்தி சிலைகள் 1985ல் திருடு போயின. உள்ளூர் காவல்துறைய்னர் ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என 1986ல் வழக்கை முடித்தனர். இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள மியூசியங்களின் இணையதளங்களை ஆய்வு செய்தபோது அமெரிக்காவின் மியூசியம் ஒன்றில் இந்த சிலைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மத்திய அரசின் உதவியோடு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நீண்ட போராட்டத்திற்கு பின் இந்த சிலைகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சிலைகள் மதுரை கொண்டு வரப்பட்டன. ஆழ்வார்குறிச்சி கோயில் நிர்வாகிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.