சாதனா அறக்கட்டளை அலுவலகத்தில் ஹிந்து சமய பண்பாட்டு வகுப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் திரு பரமேஸ்வரன் அவர்கள் வரவேற்க, கன்னியாகுமரி வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம், சுவாமி சைதன்யானந்த மகராஜ் அவர்கள் தன்னுடைய ஆசியுரை வழங்கினார். சுவாமியின் ஆசியுரைகள் “இன்று நமது மக்களுக்கு ஹிந்து சமயம் பற்றிய தெரிதலும் புரிதலும் அறிதலும் இல்லை என்றால் என்ன நடக்கும் என்பதை நாம் எண்ணி பார்க்க வேண்டும். சமய அறிவு இல்லை எனில் நமது வாழ்க்கையே வீண். இவ்வுலகில் எண்ணற்ற உயிரினங்கள் இருக்கின்றன, அந்த உயிரினங்களில் மனிதன் மட்டும் வேறுபடுகிறார். எப்படி எல்லா உயிரினங்களும் பிறக்கின்றன, உண்கின்றன, உறங்குகின்றன, அச்சப்படுகின்றன, இனவிருத்தி செய்கின்றன ? விலங்குகளிலிருந்து மற்ற உயிரினங்களில் இருந்து மனிதனை எது வேறுபடுத்திக் காட்டுகிறது? கடவுள் இல்லை என்று சொல்வது தான் பகுத்தறிவு என்கிறார்கள். அவ்வாறு கடவுள் இல்லை என்று சொன்னால் அது இல்லாததற்கான லட்சணம் என்ன என்று யாரும் காண்பிப்பதற்கு தயாராக இல்லை. பகுத்தறிவுவாதிகள் மனிதனை நினை கடவுளை மற என்று கூறுகிறார்கள். ஆனால் மனிதனை மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் கடவுளாக நினை என்ற உயர்ந்த கருத்தை கொண்டுள்ளது நமது ஹிந்து சமயம். உண்மையில் பகுத்தறிவுவாதி என்று சொன்னால் அது பட்டினத்தார் தான். பட்டினத்தார் தான் இந்த உடல், உயிர் எல்லாவற்றுக்குமான விஷயங்களை ஆராய்ந்து ஆராய்ச்சி செய்து சொல்லியிருக்கிறார். நான் என்பது யார்? நான் என்பது உடலா? அல்லது உடலில் இருக்கக்கூடிய உயிரா? உயிர் அழிவதில்லை, உயிருக்கு மரணமில்லாப் பெரு நிலை கொண்டது. சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் அதைத்தான் சொல்கிறார். மரணமில்லாத மக்களை பாவிகள் என்று சொல்வது தவறு. 30 வயது உடைய சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் நமது தேசத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தினார். அதுவரை நம் நாட்டைப் பற்றி அன்னியர்களுக்கு தவறான கண்ணோட்டம் இருந்தது. பாம்பாட்டிகள் நிறைந்த நாடு, அறியாமை நிறைந்த நாடு என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்த நேரத்தில் சுவாமி விவேகாந்தரின் எழுச்சி உரை உலகம் முழுக்க ஹிந்து சமயத்தைப் பற்றி அறிவுறுத்தியது. நமக்கு மரணம் இல்லை. உயிரைப் பற்றி கவலைப்படுவதில்லை. உயிரை அழகுபடுத்த கூடிய கருவி தான் சமயம் ஆகும். என்றார்.
RSS தென் பாரத அமைப்பாளர் திரு தாணுமாலயன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அவர்கள் வழங்கிய சிறப்புரை “ஞானமும், பக்தியும் உருவான இடம் என்று பாகவதத்தில் கூறுவது காவிரி கரையில் தான் என்று பாகவதம் கூறுகிறது. ஹிந்துவின் சமய அறிவு என்பது நமது முன்னோர்கள் நேரடியாக அனுபவித்து தரிசனம் செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படி முன்னோர்கள் கண்டு கொண்டதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். சமயம் பற்றிய ஞானம், சமயம் பற்றிய அறிவு முன்பு வீடுகளிலேயே கிடைத்தது, ஆனால் தற்பொழுது அது கிடைப்பதில்லை, ஆகவே சமயவகுப்பு மூலமாக அதை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் தேவைபடுகிறது. நமது பகுதியில் உள்ள ஆன்மீக பெரியவர்களுக்கும் கூட சமயம் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.” என்றார்
RSS தென் பாரத செயலளார் திரு ராஜேந்திரன் அவர்கள் “கோடை கால பண்பாட்டு வகுப்பு” புத்தகத்தை வெளியிட, கன்னியாகுமரி வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம், சுவாமி சைதன்யானந்த மகராஜ் அவர்கள் பெற்றுகொண்டார்கள். RSS திருச்சி கோட்ட தலைவர் திரு செல்லத்துரை அவர்கள், இந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில தலைவர் டாக்டர் தெய்வ பிரகாசம் அவர்கள்,
விசுவ ஹிந்து பரிஷத் தென்தமிழக அமைப்புச் செயலாளர் திரு சேதுராமன், மற்றும் அதன் பொறுப்பாளர்கள், சேவாபாரதி தென்தமிழக அமைப்புச் செயலாளர் திரு உன்னிகிருஷ்ணன் அவர்கள் மற்றும் ஆலய பாதுகாப்பு குழு அமைப்பு செயலாளர் திரு சுடலை மணி அவர்கள் மற்றும் அதன் பொறுப்பாளர்கள், வித்யா பாரதி பொறுப்பாளர்கள், பாஜக பொறுப்பாளர்கள், சங்க ஸ்வயம் ஸேவககர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
credit by VSK dakshin tamilnadu