கேரளாவை ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிச கூட்டணி அரசு, அதன் ஆட்சிக் காலத்தில் நீதித்துறை கமிஷன்களுக்கு பல கோடி ரூபாய் பணத்தை செலவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016ம் ஆண்டு முதல் பினராயி தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. அப்போது முதல் நீதிபதி பி.ஏ. முகமது கமிஷன், நீதிபதி சி.என். மோகன் கமிஷன் உள்ளிட்ட ஏழு நீதித்துறை கமிஷன்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. நியமிக்கப்பட்ட ஏழு சட்ட ஆணைக் குழுக்களுக்கும் சேர்த்து ஆறு கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த 4 ஆண்டுகளில் சட்ட ஆலோசனைகளுக்காக 1.5 கோடி செலவிடப்படுகிறது என்று சி.ஏ.ஜியின் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.