கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அமெரிக்கா, நார்வேயை சேர்ந்த குழுவினர் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ பத்திரிகையில் வெளியானது. அதில், ‘கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி, வெளிப்பாடு மூலமாகவோ பெரியவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளனர். எனவே இந்தத் தொற்று இனி இளம்குழந்தைகளுக்கு மாறக்கூடும். குழந்தைகளுக்கும் கொரோனா தீவிரம் குறைவாகவே உள்ளது. நீடித்த நோய் எதிர்ப்புச்சக்தியால் வயதானவர்கள் புதிய நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். நோய் எதிர்ப்புச்சக்தியை விட தடுப்பூசியால் வலுவான பாதுகாப்பு ஏற்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் மற்ற பொதுவான ஜலதோஷ வைரஸ் போல கொரோனா வைரஸ் மாறிவிடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.