இதுவரை தலைவலி, காய்ச்சல், சளி போன்ற புளூ காய்ச்சலின் அறிகுறிகள் தான் கொரோனா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளாகவும் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் அமெரிக்க, ஐரோப்பிய மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வுகள் கொரோனாவுக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள் இருக்கக் கூடும் என கூறுகின்றன. வாசனையை சரியான நுகர்ந்து இனம்காண முடியாத நிலை, மற்றும் சுவையை சரியாக உணர முடியாத நிலை – ஆகியவைதான் அந்த அறிகுறிகள். சீனா, இத்தாலி, தென்கொரியா நாடுகளில் உள்ள 25% கொரோனா நோயாளிகள் தங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்துள்ளதாகக் கூறி உள்ளனர்.