உலக சந்தையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதை முன்னிட்டு பலர் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்று வாகனம் தேடிவரும் நிலையில் மகராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பயோ எத்தனாலை வாகனங்களுக்கு பயன்படுத்தலாம் எத்தனால் மீது எடுக்கப்பட்ட முடிவால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு மிச்சமானது. பசுமை ஹைட்ரஜன், எத்தனால், சி.என்.ஜி மூலம் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் ஓடும் நாள் வெகு தொலைவில் இல்லை. பாரதத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு மிகமிகக் குறைவாக இருக்கும் என்று கூறினார்.