குடியுரிமை சட்டம் பற்றி அறியாத பாமர மக்களுக்கு கேள்வி – பதில்

CAA & NRC பற்றி பல வதந்திகள் பரவுவதால் அது குறித்து தெளிவு பெறுதல் அவசியம்.

1. CAA என்பது என்ன?

பதில்: (Citizenship Amendment Act என்பது 1955 ஆம் ஆண்டு சட்டத்தில் செய்யப்பட்ட சட்டத்திருத்தம். ஒரு நாட்டில் யார் குடிமக்களாக தகுதி உள்ளது என்பதை அந்நாடு முடிவு செய்யும் உரிமை உள்ளது. எல்லா நாட்டிலும் பல்வேறு condition கள் உள்ளன. மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளில் எளிமையான condition கள் இருக்கும். காரணம், அவர்களுக்கு மக்கள் தொகையை கூட்ட வேண்டிய நிர்பந்தம். உதாரணத்திற்கு ஆஸ்திரேலியாவில் நீங்கள் 4 வருடம் வசித்தாலே குடி உரிமைக்கு விண்ணப்பிக்கலாம். காரணம் குறைவான மக்கள் தொகை. அப்படி இந்தியாவில் இருக்கும் citizenship Act இல் செய்யப்பட்ட சமீபத்திய சட்டத்திருத்தம் தான் CAA.

2. NRC என்பது என்ன?

பதில்: வங்கதேசம் 1971 இல் பிரிந்த பின் லட்சக்கணக்கான அகதிகள் மத பாகுபாடு, வறுமை போன்ற பல்வேறு காரணங்களால் காடு, நதி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர். குறிப்பாக அசாமில். அதனால் தங்கள் வேலைவாய்ப்பும், கலாச்சாரமும், மொழியும் அழிவதாக அசாம் மக்கள் அஞ்சினர். 1979 – 1985 வரை நடந்த நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடி ஏறியவர்கள் வெளியேற்றப் படுவார்கள் என்று ராஜிவ் காந்தி உறுதி அளித்த பின் போராட்டம் நின்றது. யாரெல்லாம் அசாமின் பூர்வ குடிகள் என்று கணக்கெடுப்பதே NRC யின் நோக்கம். அதுவும் அந்த மக்களின் போராட்டத்தின் காரணமாக எடுக்கப்படும் கணக்கெடுப்பு. நடைமுறையில் மிகவும் கடினமான பணி பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டே இருந்தது. 2013 இல் உச்ச நீதிமன்றம் விரைவாக முடிக்க வேண்டும் என்று கண்டிப்பாய் சொன்னது. அசாமில் மட்டுமே இந்த NRC கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது CAA, NRC இரண்டும் ஒன்றல்ல. வெவ்வேறு.

3. CAA வின் சிறப்பம்சம் என்ன?

பதில்:: CAA முழுக்க முழுக்க refugees & amp infiltrators (அகதிகள் & ஊடுருவல்காரர்கள்) பற்றி மட்டுமே பேசுகிறது. அதாவது முறையான VISA இல்லாமல் வந்தவர்கள். முறையான VISA வுடன் வந்தவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆப்கான், பாக், வங்கத்திலிருந்து வந்த இந்து, கிறிஸ்தவ, பார்சி, ஜைன, புத்த, சீக்கிய அகதிகள்/ஊடுருவல் காரர்கள் இந்தியாவில் 5 வருடங்கள் வாழ்ந்ததாக நிரூபித்தால் போதும் குடியுரிமை அளிக்கப்படும். அதுவே இஸ்லாமியர்களாக இருந்தால் அவர்கள் எத்தனை வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் குடி உரிமை கிடைப்பது சற்று சிரமம்.. 12ஆண்டுகள் பிறகு அப்ளை செய்தால் அரசு பரிசீலனை செய்யும்..

4. VISA வுடன் முறையாக வந்தவர்கள் குடி உரிமை பெற முடியுமா?

பதில்: நிச்சயமாக முடியும். உதரணத்திற்கு Adnan Sami என்னும் பிரபல பாலிவுட் பின்னணி பாடகர் பாகிஸ்தானை சேர்ந்தவர். அவர் முறையான Visa வுடன் இங்கே வந்து, இங்கேயே பல காலம் தங்கி குடி உரிமைக்கு விண்ணப்பித்து இந்தியக் குடிமகனாகவும் ஆகி விட்டார்.

5. அதென்ன ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கத்திலுள்ள non-muslimகளுக்கு மட்டும் குடியுரிமை?

பதில்:: ஆப்கான், வங்கம், பாக் இவை மூன்றும் இஸ்லாமிய நாடுகள். இம்மூன்றிலும் மதத்தினால் பாகுபாடு என்றால் அது non-muslim களுக்கு தான். மதத்தின் காரணமாக பிரிக்கப்பட்டவை தான் இந்த நாடுகள். 1948 க்கு முன் இந்த பரந்து விரிந்த பாரத தேசத்தின் பிள்ளைகள் அவர்கள். சந்தர்ப்ப வசத்தால் அவர்கள் அந்த நாட்டிற்குள்ளே போக வேண்டிய தாயிற்று. அவர்களுக்கும் மத ரீதியான துன்புறுத்தல் என்றால் இந்தியா தானே ஆதரவு அளிக்க முடியும். தவிர, அவர்களின் எண்ணிக்கையும் ஓரளவு குறைவு தான். நாம் கட்டிக்கொடுத்த நம் பெண்ணுக்கு புகுந்த வீட்டில் கொடுமை என்றால் அந்த பெண்ணுக்கு நாம் தானே அடைக்கலம் கொடுக்க வேண்டும்?

6. அவ்வாறெனில் அஹமடியா போன்ற இஸ்லாமியர்களும் தானே இந்த பாரத தேசத்தின் பிள்ளைகள்?

பதில்:: தங்களுக்கு என்று ஒரு தேசம் வேண்டும் என்று பிரிந்து சென்றவர்கள் அவர்கள். நம்மிடம் அடித்து பிடித்து பல ரத்தக்களரி உண்டாக்கி நம் சொத்தில் பங்கு பிரித்து சென்ற மகன், சில வருடங்கள் கழித்து மீண்டும் நம்மிடமே வந்தால் செருப்பால் அடிப்போமா மாட்டோமா? அதுபோல் தான். இஸ்லாமியர்களுக்குள் வேறுபாடு என்றால் அது அவர்கள் அண்ணன்-தம்பி பிரச்சனை. அதனை அவர்களே தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். பாரத தேசத்தின் கணிசமான பகுதியை பல 1000 விதவைகளின் ரத்தத்தில் பெற்றுக்கொண்டவர்கள், மீண்டும் வந்தால் ஏற்றுக்கொள்ள நாம் என்ன காதில் பூ சூட்டிக் கொண்டிருக்கிறோமா? இல்லை ஆஸ்திரேலியா போன்று குறைவான மக்கள்
தொகையா? தவிர, அவர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள்

7. அகதிகளாக இங்கே வாழும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை கொடுப்பதில் என்ன சிக்கல்?

பதில்:: இந்த சட்டம் தெளிவாக 'மத ரீதியாக துன்புறுத்தப்படுபவர்களுக்கு என்று சொல்கிறது. ஈழத்தமிழர்கள் எதிர்கொண்டது ethnicity crisis. அதாவது இன ரீதியான தாக்குதல். இதே ஈழத்தமிழர்கள் மொத்தமாக பௌத்தத்திற்கு மாறத் தயாரானால் இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று நினைக்கிறீர்களா? போர் என்று நம் நாட்டில் தஞ்சம் புகுந்தனர். இபோது போர் முடிந்து 10 வருடங்கள் ஆகின்றன. ஏற்கனவே 37000 வீடுகள் இந்திய அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டு ஈழத்தமிழர்கள் மீள் குடியேற்றம் செய்யப்படனர். மெல்ல மெல்ல அனைவரும் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டால் சிங்கள நாடு அமைவதற்கு நாமே துணை போனது போல் ஆகிவிடும்

8. NRC நாடு முழுதும் அமுல்படுத்தப்படுமா?

பதில்:: NRC நாடு முழுதும் அமுல்படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் அமித் ஷா தெரிவித்தார். இது கொள்கை அளவில் தான் உள்ளது. அது பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பின் தான் செயல் வடிவம் பெறும். அதுவரை
பொறுத்திருப்போம்.

9. NRC நாடு முழுதும் அமுல்படுத்தப்பட்டால், தாத்தாவின் தாத்தாவுடைய birth certificate தேவைப்படுமா?

பதில் :: இது ஒரு தேவையில்லாத புரளி. அமித் ஷா சொன்னது செயல் வடிவமாக பல வருடங்கள் ஆகும். அப்போது என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்று அரசு கொடுக்கும். அதுவரை புரளிகளை பரப்ப வேண்டாம்.

10. முறையான ஆவணங்கள் இல்லாத ஒரு தமிழ்நாட்டு இந்துவும் இஸ்லாமியரும்(ex: ரமேஷ், ராவுத்தர்) இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது ramesh தான் இங்கே 6 வருடங்கள் வாழ்ந்ததாக நிரூபித்தாலே போதும். CAAவின் படி குடி உரிமைக்கு பங்கம் வராது. ஆனால், ராவுத்தர் எத்தனை வருடங்கள்
வாழ்ந்தாலும் ஊடுருவல்காரர் என்று அரசு முடிவு செய்துவிடுமே?

பதில்:: ஏற்கனவே சொன்னது போல், ஆவணங்கள் தொடர்பான முறையான அறிவிப்பு வரும் வரை நாமாக எதையும் அனுமானித்திக்கொண்டு பிறரையும் அச்சுறுத்த வேண்டாம். இந்தியாவில் தோராயமாக 20 கோடி முஸ்லிம்கள். அவர்கள் எல்லாரையும் இரவோடு இரவாக வெளியேற்றிவிடுவார்கள் என்பது அபத்தமான  வாதம். அவ்வாறெனில் பாரதத்தை நேசிக்கும் பல கோடி இஸ்லாமியர்கள் பக்கம் தான் நாங்கள் இருப்போம். எனவே கற்பனைகளை மூட்டை கட்டி வையுங்கள்.

11. அசாம் போராட்டமும் மேற்கு வங்க போராட்டமும் ஒன்றா?

பதில் :: இல்லை. எந்த மதத்தை சேர்ந்த அகதியாய் இருந்தாலும் குடி உரிமை அளிக்கப்படக்கூடாது' என்கிறது அசாம் எல்லா மதத்தை சேர்ந்த அகதிக்கும் குடி உரிமை அளிக்கப்பட வேண்டும், என்பது மேற்கு வங்க போராட்டம்

12. ரோஹிங்கியாக்களை ஏன் சேர்க்கவில்லை?

பதில்:: ரோஹிங்கியாக்களுக்கு குடி உரிமை அளிக்கப்பட மாட்டாது என்று வங்கதேச பிரதமர் கூறி உள்ளார். மியான்மருக்கு அருகிலிருக்கும் இஸ்லாமிய நாடான வங்கதேசமே ஏற்க மறுக்கும் போது நாம் ஏன் ஏற்க வேண்டும்? நாம் என்ன இளித்தவாயர்களா? உலகின் அனைத்து அகதிகளுக்கும் குடி உரிமை அளிக்கும் அளவுக்கா நம் நாட்டில் மக்கள் தொகை குறைவாக உள்ளது?