ஜனநாயக முறையில் இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீண்ட விவாதங்களுக்கு பிறகு குடியுரிமை திருத்த மசோதாவானது சட்டமாக உருவாகியுள்ளது. இந்திய நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இயற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டம் 2019 ஐ ABVP முழுமனதாக வரவேற்கின்றது.
அரசியல் காரணங்களுக்காக குடியுரிமை திருத்த சட்டம் பற்றிய பொய் பிரச்சாரங்கள் நாடு முழுவதும் பரப்பப்பட்டு வருவதை ABVP வன்மையாக கண்டிக்கிறது. தேச விரோத கம்யூனிச அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் படிக்கும் மாணவர்களுக்கு இடையே மதரீதியாக இனரீதியாக பொய் பிரச்சாரங்களை செய்து போராடத் தூண்டுகின்றன. மாணவர்களை பொது சொத்துக்களை சேதப்படுத்த செய்து நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்கின்றன.
இவ்வாறு செயல்படக்கூடிய தேசவிரோத கம்யூனிச அமைப்புகள் மீதும் அரசியல் கட்சிகள் மீதும் பாகுபாடின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை ABVP வலியுறுத்துகிறது.
குடியுரிமை திருத்த சட்டம் 2019 பற்றிய உண்மை விவரங்களை மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக நாடு முழுவதும் கல்லூரி வாயில் கூட்டங்கள், வாசகர் வட்டங்கள், கருத்தரங்குகள் நடத்திட நமது அமைப்பு திட்டமிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 பற்றி கல்லூரிகளில் அரசு சார்பில் கருத்தரங்குகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும் என்று அரசினை ABVP கேட்டுக் கொள்கிறது.
தேச விரோத அமைப்புகள் அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு படிக்கும் மாணவர்கள் பலிகடா ஆகி விட வேண்டாம் என்று தென்தமிழ்நாடு ABVP கேட்டுக் கொள்கிறது.