சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, நவம்பர் 24, 2016 அன்று பிறப்பித்த உத்தரவில், இந்திய தொல்லியல் ஆய்வகம் கீழடியில் கிடைத்த தொல் பொருட்களை, டேராடூனில் உள்ள தனது ரசாயன ஆராய்ச்சிக்கூடத்திற்கோ அல்லது நாட்டிலுள்ள எந்த ஆராய்ச்சி கூடத்திற்கும் அனுப்ப அனுமதி வழங்கியது. கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை துல்லியமாக ஆய்வு செய்யும் தொழில்நுட்பம் சென்னையில் உள்ள இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் ரசாயன ஆராய்ச்சி கூடத்தில் இல்லை என்று, அதன் நிர்வாக இயக்குனர் ராகேஷ் திவாரி அளித்த அறிக்கையின் பேரில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது
கேள்விக்குரிய நபர்கள், நோக்கம் அணுகுமுறை ஒரு ஆய்வு என்று கூட்டணி அமைத்தால் விளைவென்ன? சர்ச்சைகள் தான், வேறென்ன?
வரலாற்று ஆய்வு என்ற பெயரில் கீழடியில் கைகோர்த்திருக்கும் நபர்கள், அமைப்புகளின் பின்னணியை உற்று நோக்கினால் வெளிப்படும் உண்மைகள் அச்சுறுத்துபவை, நாட்டிற்கு ஆபத்தானவை.
முதலில் தென்படுபவர் ஜெகத் கஸ்பர். 1992-95 காலங்களில் கன்னியாகுமரியில் பாதிரி. மெல்ல மெல்ல செல்வாக்கை வளர்த்துக்கொண்டு கருணாநிதி குடும்பத்துடன் நெருக்கமானார். கனிமொழியுடன் இணைந்து தமிழ் மையம் என்ற அமைப்பைத் துவக்கி சென்னை சங்கமம் என்று 2009,- 2010 ஆண்டுகளில் பொங்கல் பண்டிகைக் காலங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தியவர், இதனால் பின்னர் சிபிஐ விசாரணைக்கு உள்ளானார். 2003-06 காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததாகவும் அவர்களுக்காக ஹவாலா போன்ற நிதி மோசடிகளில் கஸ்பர் ஈடுபட்டதாகவும் அமெரிக்கப் புலனாய்வுத்துறை அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. இவருடைய கூட்டாளி நாச்சிமுத்து சாக்ரடீஸ் என்பவன் விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்கள் கடத்தும் விவகாரத்தில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதாக 2006 ஆகஸ்ட் 22, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைச் செய்தி கூறுகிறது. இந்த விவகாரத்தில் ஜெகத் கஸ்பரை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்க உளவு ஸ்தாபனமான எஃப் பி.ஐ. (FBI) கோரியதாகவும் ஆனால் ப.சிதம்பரம் – கருணாநிதி நெருக்கம் அவரைக் காப்பாற்றியதாகவும் சுப்ரமணிய சுவாமி பின்னர் 2013 செப்டம்பர் தன்னுடைய டுட்டரில் பதிவிட்டார். ஜெகத் கஸ்பருக்கு கூடங்குளத்தில் நடந்த போராட்டங்களுடனும் தொடர்புண்டு.
அடுத்ததாக பி.ஜே.செரியன் என்ற ஆய்வாளரின் பங்கையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இவர் கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் பட்டணம் என்ற இடத்தில் 2007ல் அகழ்வாராய்ச்சி நடத்தியவர். இப்பொழுது கீழடிக்கும் பட்டணத்திற்கும் எப்படியாவது முடிச்சுப் போடவேண்டும் என்று தவியாய்த் தவிக்கிறார். PAMA Institute For The Advancement of Transdisciplinary Archaelogical Sciences என்பது இவர் நடத்தும் தன்னார்வ அமைப்பு (NGO). மேலும் லூர்து ஆனந்தன் வின்சென்ட் சின்னதுரை போன்ற கத்தோலிக்கப் பாதிரிகளும் கீழடி விவகாரத்தில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஜி.யூ. போப்பின் 200வது பிறந்த நாளை கொண்டாடுவதாகக் கூறிக்கொண்டு அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பினர் (FETNA) 2019 ஜூலை சிகாகோ நகரில் பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதில் பெரும்பங்கு வகித்தனர். அவர்கள் தமிழைக் கிறிஸ்தவ மயமாக்கிய ‘அரும் தொண்டிற்காக’ ஜெகத் கஸ்பரை கெளரவித்திருக்கிறார்கள். இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்ற அமர்நாத் ராமகிருஷ்ணா அழைக்கப்பட்டார். FETNA அமைப்பு வெளிப்படையாக இலங்கைப் பிரச்சினையில் விடுதலைப் புலிகளை ஆதரித்தவர்கள்.
இத்தகைய காரணங்களால் மத்திய அரசு அமர்நாத் ராமகிருஷ்ணாவின் வெளிநாட்டுப் பயணத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. அவர் அகழ்வாராய்ச்சி அறிக்கைகளை குறிப்பிட்ட நேரத்தில் சமர்ப்பிக்காததால் அடுத்தடுத்த கட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மத்தியதுறை அனுப்பவில்லை. இவரை கெளஹாத்தி வட்டத்திற்கு மாற்றினால் இவருக்காக இடதுசாரிகள் கொடிபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். எப்படியாவது மத்திய மாநில அரசுகளுக்கிடையே மோதலை உண்டாக்கத் துடிக்கும் சக்திகள் இணைகின்றன.
ஆரிய திராவிட இனவாதம் என்ற விஷவித்தை ஊன்றிய கால்டுவெல், – ஜி.யூ.போப் போன்றவர்களின் வம்சாவளி இன்னும் தொடர்வதுதான் வேதனையானது.
(ஆதாரம்! ஆர்கனைசர் 2019 அக்டோபர் 30), இதழில் முனைவர் பி.எஸ். ஹரிசங்கர் கட்டுரை)
கீழடி அகழ்வாராய்ச்சியுடன் ஏசுவின் சீடராக கருதப்படும் தாமஸ் பற்றிய கதைகளுக்கு ஆதாரம் உருவாக்கும் முயற்சிகளும் நடைபெறுகிறது. கத்தோலிக்க பாதிரி PJ லாரன்ஸ் ராஜ், கத்தோலிக்க பிஷப்கள் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் பேசும்போது “தாமஸ் மக்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதால், அவர் ஹிந்துக்களால் கொல்லப்பட்டார் என்கிற கருத்தை மீண்டும் பொது வெளியில் எடுத்துசெல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார்.