உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் மனமுடைந்த இந்திய வீரர்களை நேரில் சந்தித்த பிரதமர் மோடி, ஆறுதல் வார்த்தை கூறி தேற்றினார் பிரதமர் மோடி. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்திய அணி தோல்வியடைந்தது. தொடர்ந்து 10 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் பைனலுக்கு முன்னேறிய இந்தியா தோற்றதால் வீரர்கள் மனமுடைந்தனர். பைனலை நேரில் பார்த்த பிரதமர் மோடி, இந்திய வீரர்களின் டிரசிங் ரூமிற்கு சென்று ஆறுதல் வார்த்தை கூறி தேற்றினார்.
இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகிய இருவரின் கையை பிடித்து, ‘தோல்வி ஏற்பட்டாலும் உங்களின் திறமையும், மனஉறுதியும் மிகவும் பாராட்டத்தக்கது. உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்’ என்றார். பின் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் சந்தித்தார். ஒவ்வொரு வீரரையும் கைகொடுத்து அவர்களின் பங்களிப்பு மற்றும் திறமையை பாராட்டினார். உலக கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தி அசத்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை கட்டித்தழுவி ஆறுதல் கூறினார். மோடியுடன் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் உடனிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.