கிராமின் சம்ருதி கடைகள்

சி.ஏ.ஏ எதிர்ப்பு வன்முறை போராட்டங்கள் நடைபெற்றபோது பாரதத்தில் ஹிந்துக்கள் பல்வேறு சங்கடங்களை சந்தித்தனர். டெல்லி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இதன் பாதிப்புகள் அதிகம். கேரளாவில் இந்த போராட்டம் காரணமாக முஸ்லிம்கள், ஹிந்துக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மட்டும் கடைகளை அடைத்தனர். செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டது. பல ஹிந்துக்களை தங்கள் கடை, நிறுவனங்களில் இருந்து வேலையை விட்டு நீக்கினர். முஸ்லிம்களின் இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கையால் ஒரு நல்ல விஷயமும் நடந்துள்ளது.

கேரளாவில் வாழும் ஹிந்துக்கள் தங்களுக்கான வியாபார நிறுவனம் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். இதற்காக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. கிராமின் சம்ருதி நற்பணி மன்றம் சார்பில் கிராமின் சம்ருதி கூட்டுறவு விற்பனை கடைகள் துவங்கப்பட்டன. மக்களின் ஏகோபித்த வரவேற்பை அடுத்து தற்போது 35 கடைகள் துவங்கி நடத்தப் படுகின்றன. இதில் 200 பேர் பணியாற்றுகின்றனர். இதை பாரத் அக்ரோ பிராஸசிங் & மார்க்கெட்டிங் கூட்டுறவு லிமிடெட் நிர்வகிக்கிறது. இதுவரை இந்த கடைகள் 12 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளன. அக்ஷய ஸ்ரீ சுய உதவி குழுக்கள் மூலமாக பொருட்கள் வாங்கப்படுகின்றன. இந்த குழு உறுப்பினர்கள் 1,000 முதல் 50,000 வரை பணம் செலுத்தி பங்குதாரர்களாக உள்ளனர். பங்குக்கு ஏற்ப லாபம் கிடைக்கிறது. கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் வட்டியில்லா கடனாக 79 லட்சம் வினியோகிக்கப்பட்டது. நிகர லாபமாக 24 லட்சம் கிடைத்துள்ளது.

ஹிந்துக்களின் ஒன்றிணைந்த வியாபார வெற்றிக்கு கேரளா வழிகாட்டியுள்ளது.