ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலம், ஜம்மு – காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாக அறிவித்தது.
அக்டோபர், 31 முதல், இரண்டு யூனியன் பிரதேசங்களும், செயல்பாட்டுக்கு வர உள்ளன.சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், நேற்று லடாக்கிற்கு சென்றார். அங்கே, லே பகுதியில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், காஷ்மீர், எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான். அது ஒருபோதும், பாகிஸ்தானுக்கு சொந்தமாக இருந்தது இல்லை; சொந்தமும் ஆகாது.
பாகிஸ்தான் தான் காஷ்மீரின் ஒரு பகுதியையும், கில்ஜித் பகுதியையும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. காஷ்மீருக்காக முதலை கண்ணீர் வடிக்காமல், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடக்கும், மனித உரிமை மீறலைத் தடுக்க, பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும்.
காஷ்மீர் மீது, பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. காஷ்மீர் குறித்து, பாகிஸ்தான் சர்வதேச அளவில் எழுப்பி வரும் பிரச்னைக்கு, எந்த நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
பயங்கரவாதத்தை துாண்டிவிட்டு, இந்தியாவைச் சிதைக்க முயலும் பாகிஸ்தானுடன், எப்படி பேச்சு நடத்த முடியும். அண்டை நாடுகளுடன் நல்ல நட்புறவைக் கடைப்பிடிக்கவே, இந்தியா விரும்புகிறது. ஆனால், அதற்கு முதலில், பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று ராஜ்நாத் சிங் பேசினார்.
concentrate on automobile industrie Which gives employment for crores of people directly and indirectly with revenue of 20%of GDP so save automobile industries.